தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வரலாறு படைத்தார் ஜோதி * உலக கோப்பை வில்வித்தையில்...

வரலாறு படைத்தார் ஜோதி * உலக கோப்பை வில்வித்தையில்...

வரலாறு படைத்தார் ஜோதி * உலக கோப்பை வில்வித்தையில்...


ADDED : அக் 18, 2025 10:43 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 18, 2025 10:43 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நான்ஜிங்: உலக கோப்பை வில்வித்தை காம்பவுண்டு பிரிவில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார்.

சீனாவின் நான்ஜிங் நகரில் உலக கோப்பை வில்வித்தை பைனல் நடக்கிறது. இந்த ஆண்டு உலகின் பல்வேறு பகுதிகளில் நடந்த உலக கோப்பை வில்வித்தை 'ஸ்டேஜ்' போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட 'டாப்-8' நட்சத்திரங்கள் இதில் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான காம்பவுண்டு பிரிவில் இந்தியாவின் ஜோதி, மதுரா களமிறங்கினர்.

இதன் காலிறுதியில் ஜோதி, அமெரிக்காவின் அலெக்சிசை (143-140) வென்றார். மதுரா, 142-145 என மெக்சிகோவின் மரியானாவிடம் வீழ்ந்தார். அடுத்து நடந்த அரையிறுதியில் ஜோதி, மெக்சிகோவின் ஆன்ட்ரியாவிடம் 143-145 என தோற்றார். பின் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் ஜோதி, 150-145 என பிரிட்டனின் எல்லா கிப்சனை சாய்த்தார்.

உலக கோப்பை வில்வித்தை பைனல், காம்பவுண்டு பிரிவில் முதல் பதக்கம் (வெண்கலம்) வென்ற இந்திய வீராங்கனை ஆனார் ஜோதி 29. இவருக்கு ரூ. 8.86 லட்சம் பரிசு கிடைத்தது.

ஆண்கள் பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் ரிஷாப் யாதவ், முன்னாள் உலக சாம்பியன் நெதர்லாந்தின் மைக் ஸ்காலசெரை சந்தித்தார். போட்டி 147-147 என சமன் ஆனது. அடுத்து நடந்த 'ஷூட் ஆப்' முறையில் ரிஷாப் தோல்வியடைந்து, 4வது இடம் பிடித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us