/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வில்வித்தை: இந்தியா 'வெண்கலம்'
/
வில்வித்தை: இந்தியா 'வெண்கலம்'
ADDED : ஏப் 10, 2025 10:41 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புளோரிடா: உலக கோப்பை வில்வித்தையில் இந்திய ஆண்கள் அணி வெண்கலம் வென்றது.
அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை (ஸ்டேஜ் 1) தொடர் நடக்கிறது.
ஆண்களுக்கான காம்பவுண்டு பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் ரிஷாப் யாதவ், அபிஷேக் வர்மா, ஓஜாஸ் பிரவின் இடம் பெற்ற அணி, நான்காவது இடம் பிடித்தது. அரையிறுதியில் இந்தியா, இத்தாலி மோதின. போட்டி 219-219 என சமன் ஆனது. அடுத்து நடந்த 'ஷூட் ஆப்' முறையில் இந்தியா 27-29 என தோற்றது.
வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, 230-223 என டென்மார்க்கை சாய்த்தது.