/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
கோப்பை வென்றது ராஜஸ்தான் * முதல் வில்வித்தை பிரீமியர் தொடரில்
/
கோப்பை வென்றது ராஜஸ்தான் * முதல் வில்வித்தை பிரீமியர் தொடரில்
கோப்பை வென்றது ராஜஸ்தான் * முதல் வில்வித்தை பிரீமியர் தொடரில்
கோப்பை வென்றது ராஜஸ்தான் * முதல் வில்வித்தை பிரீமியர் தொடரில்
ADDED : அக் 13, 2025 11:12 PM

புதுடில்லி: பிரிமியர் கிரிக்கெட், புரோ கபடி போல, சர்வதேச அரங்கில் முதன் முறையாக வில்வித்தை பிரிமியர் லீக் தொடர் இந்தியாவில் நடந்தது. மொத்தம் 6 அணிகள் பங்கேற்றன. இந்தியாவின் 36, சர்வதேச அளவில் 12 என மொத்தம் 48 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். டில்லியில் நடந்த இத்தொடரில் ஒவ்வொரு அணியும் மற்ற அணியும் தலா 2 முறை மோதின.
முடிவில் ராஜஸ்தான் (ராஜ்புத்தனா ராயல்ஸ்), மஹாராஷ்டிரா (மைட்டி மராத்தாஸ்), டில்லி (பிரித்விராஜ் யோதாஸ்), ஜார்க்கண்ட் (செரோ ஆர்ச்சர்ஸ்) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. தமிழகத்தின் சோழா சீப்ஸ் அணி, 5வது இடம் பெற்று வெளியேறியது.
டில்லியில் நடந்த பைனலில் ராஜஸ்தான், டில்லி அணிகள் மோதின. இப்போட்டி 4-4 என சமனில் முடிந்தது. அடுத்து நடந்த 'ஷூட் ஆப்பில்' அசத்திய ராஜஸ்தான், 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. 2008ல் முதன் முதலாக துவக்கப்பட்ட பிரிமியர் கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் சாதித்தது போல, முதல் வில்வித்தை பிரிமியர் தொடரில் ராஜஸ்தான் சாம்பியன் ஆனது.