அர்ஜுன்–சித்தாந்த் ‘சாம்பியன்’! ஆஸி., ஓபன் டென்னிசிற்கு தகுதி
அர்ஜுன்–சித்தாந்த் ‘சாம்பியன்’! ஆஸி., ஓபன் டென்னிசிற்கு தகுதி
ADDED : நவ 28, 2026 02:17 AM

செங்டு: ஆசியா–பசிபிக் வைல்டுகார்டு தொடரில் இந்தியாவின் அர்ஜுன், சித்தாந்த் ஜோடி சாம்பியன் ஆனது.
சீனாவின் செங்டுவில் ஆசியா–பசிபிக் வைல்டுகார்டு ‘பிளே ஆப்’ டென்னிஸ் தொடர் நடந்தது. இதில் சாம்பியன் பட்டம் வென்றால், வரும் 2027 ஆஸ்திரேலிய ஓபன் டென்னிசில் பங்கேற்கலாம். இதன் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அர்ஜுன், சித்தாந்த் ஜோடி, ஜப்பானின் கெய்ட்டோ, டகெரு ஜோடியை எதிர் கொண்டது.
முதல் செட் 6–6 என இழுபறி ஆனது. அடுத்து நடந்த ‘டை பிரேக்கரில்’ அசத்திய இந்திய ஜோடி 7–6 என வசப்படுத்தியது. தொடர்ந்து இரண்டாவது செட்டையும் 6–4 என கைப்பற்றியது.
முடிவில் இந்திய ஜோடி 7–6, 6–4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது. இதையடுத்து, வரும் 2027ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடக்கவுள்ள ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் பிரதான சுற்றில் பங்கேற்க இந்திய ஜோடி தகுதி பெற்றது.
