தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கபடி வீரர் பதக்கம் பறிப்பு: ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால்

கபடி வீரர் பதக்கம் பறிப்பு: ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால்

கபடி வீரர் பதக்கம் பறிப்பு: ஊக்கமருந்து சோதனையில் சிக்கியதால்


ADDED : செப் 08, 2026 11:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2026 11:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய கபடி வீரர் பிரிஜேந்திர சிங் சவுத்ரி. 2024 புரோ கபடி சீசனில் டில்லி அணிக்காக விளையாடியுள்ளார். கடந்த ஏப்ரலில் நடந்த (சீனா) ஆசிய பீச் கபடியில் வெள்ளி கைப்பற்றிய இந்திய அணியில் இடம் பெற்றிருந்தார்.

அப்போது அவரிடம் ஊக்கமருந்து சோதனை நடந்தது. இதில் தடை செய்யப்பட்ட 'பிரின்ஜோலமைடு' என்ற மருந்து பயன்படுத்தியது உறுதியானது.

இதையடுத்து பிரிஜேந்திர சிங்கின் வெள்ளிப்பதக்கம் பறிக்கப்பட்டது. சர்வதேச சோதனை மையம் வெளியிட்ட செய்தியில்,' ஊக்கமருந்து தடுப்பு விதிகளை மீறிய இந்திய கபடி வீரர் பிரிஜேந்திர சிங் மீது, ஆசிய ஒலிம்பிக் கவுன்சில் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தனது தவறை ஏற்றுக் கொண்ட அவரிடம் இருந்து இரண்டாவது இடத்துக்கான பதக்கமும் பறிக்கப்பட்டது,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us