/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய கராத்தே: இந்தியா சாம்பியன்
/
ஆசிய கராத்தே: இந்தியா சாம்பியன்
ADDED : ஜூலை 07, 2025 11:30 PM

கொழும்பு: தெற்காசிய கராத்தே சாம்பியன்ஷிப் 9வது சீசன், இலங்கையின் கொழும்புவில் நடந்தது.
இந்தியா உட்பட 6 நாடுகள் பங்கேற்றன. 50 கிலோ சீனியர் குமிட்டே பிரிவில் இந்தியாவின் திங்னம் ரபிகன்டா தங்கம் கைப்பற்றினார். ஆண்கள் அணிகளுக்கான 'சீனியர்' கடா பிரிவில் இந்தியாவின் அபாப் சங்டோ, ஜான் சங்டோ, போகர் தங்கம் வென்றனர்.
ஒட்டுமொத்தமாக இந்தியா 23 தங்கம், 24 வெள்ளி, 12 வெண்கலம் என மொத்தம் 59 பதக்கம் வசப்படுத்தி, சாம்பியன் ஆனது.
நேபாள அணியினர் 21 தங்கம், 9 வெள்ளி, 20 வெண்கலம் என மொத்தம் 50 பதக்கங்கள் கைப்பற்றி, இரண்டாவது இடம் பிடித்தனர். தொடரை நடத்திய இலங்கை அணி, 16 தங்கம், 20 வெள்ளி, 23 வெண்கலம் என 59 பதக்கத்துடன் மூன்றாவது இடம் பெற்றது. வங்கதேசத்திற்கு (3 தங்கம், 7 வெள்ளி, 14 வெண்கலம்) 4வது இடம் கிடைத்தது.