/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய தடகளம்: இந்தியா ஆதிக்கம்
/
ஆசிய தடகளம்: இந்தியா ஆதிக்கம்
ADDED : ஏப் 28, 2024 11:27 PM

துபாய்: ஆசிய தடகளத்தில் இந்தியா 7 தங்கம் உட்பட 29 பதக்கம் வென்றது.
துபாயில், ஆசிய தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்கு உட்பட்டோருக்கான) நடந்தது. பெண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தின் பைனலில் அனுஷ்கா, கனிஸ்டா, சங்கீதா, சான்ட்ரா அடங்கிய இந்திய அணி (3 நிமிடம், 41.50 வினாடி) தங்கம் வென்றது.
ஆண்களுக்கான 4x400 மீ., தொடர் ஓட்டத்தில் அபிராம், நவ்பிரீத் சிங், நிகில் சுஹாஸ், அமன் சவுத்தரி அடங்கிய இந்திய அணி (3 நிமிடம், 09.36 வினாடி) வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றியது.
பெண்களுக்கான 1500 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் லக்சிதா சண்டிலியா (4 நிமிடம், 25.83 வினாடி) வெள்ளி வென்றார்.
ஆண்களுக்கான 3000 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் கவுரவ் போசலே (8 நிமிடம், 31.20 வினாடி), விகாஸ் குமார் (8 நிமிடம், 33.00 வினாடி) முறையே வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
பெண்களுக்கான 100 மீ., தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் உன்னாதி (13.66 வினாடி) வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.
இம்முறை 7 தங்கம், 11 வெள்ளி, 11 வெண்கலம் என 29 பதக்கம் வென்ற இந்தியா, பதக்கப்பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தை சீனா (16 தங்கம், 10 வெள்ளி, 3 வெண்கலம்) தட்டிச் சென்றது. மூன்றாவது இடத்தை ஜப்பான் (7 தங்கம், 4 வெள்ளி, 8 வெண்கலம்) பிடித்தது.

