ADDED : ஜூலை 13, 2026 11:19 PM

ஜகார்த்தா: ஆசிய குத்துச்சண்டையில் இந்தியா சார்பில் 8 பேர் பைனலுக்கு முன்னேறினர்.
இந்தோனேஷிய தலைநகர் ஜகார்த்தாவில், ஆசிய குத்துச்சண்டை (19, 23 வயது) சாம்பியன்ஷிப் நடக்கிறது. பெண்கள் பிரிவு (23 வயது) அரையிறுதியில் இந்தியாவின் நேஹா (54 கிலோ), தென் கொரியாவின் ஹேஜு லீயை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் (60 கிலோ) இந்தியாவின் நிகிதா சந்த், ஜப்பானின் சாரி கோகுபுவை தோற்கடித்தார்.
மற்ற எடைப்பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் காஜல் (65 கிலோ), முஸ்கான் (75), பிரியங்கா (+80) வெற்றி பெற்றனர்.
ஆண்கள் (23 வயது) அரையிறுதியில் இந்தியாவின் விஷ்வநாத் சுரேஷ் 5-0 என, பிலிப்பைன்ஸ் வீரரை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் கங்கா (55 கிலோ) 3-2 என, ஜப்பான் வீரரை தோற்கடித்தார். இந்தியாவின் வன்ஷாஜ் (65 கிலோ) 4-1 என, கிர்கிஸ்தான் வீரரை வீழ்த்தினார்.
அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவின் தானு (51 கிலோ), பிரச்சி (57), ஷிவானி (70), நைனா (80), ஹிதேஷ் (70), நீரஜ் (75), இஷான் கடாரியா (+90) என 7 பேர் வெண்கலப்பதக்கத்தை உறுதி செய்தனர்.
