ADDED : மே 08, 2025 10:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அல் ஐன்: ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,), ஆசிய 'கான்டினென்டல்' செஸ் சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதன் முதல் சுற்றில் இந்தியாவின் இனியன், உஸ்பெகிஸ்தானின் ஓமோனோவ் அஸ்ரோர்ஜன் மோதினர். இதில் கருப்பு நிற காய்களுடன் விளையாடிய இனியன் 22வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் இந்தியாவின் முரளி கார்த்திகேயன் (வெள்ளை), சீனாவின் காவோ கிங்பென்னை (கருப்பு) தோற்கடித்தார். இந்தியாவின் சூர்ய சேகர் கங்குலி (கருப்பு), சகவீரர் ஆராத்யா கார்க்கை வென்றார். மற்ற போட்டிகளில் இந்தியாவின் சேதுராமன், பிரனேஷ் வெற்றி பெற்றனர்.
மற்ற இந்திய வீரர்களான நிஹால் சரின், எஸ்.எல். நாராயணன், அபிஜீத் குப்தா உள்ளிட்டோர் தங்களது முதல் சுற்று போட்டியை 'டிரா' செய்தனர்.