UPDATED : அக் 02, 2026 12:00 AM
ADDED : அக் 01, 2026 08:34 PM
வாலிபால்: இந்தியா தோல்வி
ஆசிய விளையாட்டு, ஆண்களுக்கான வாலிபால் காலிறுதியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் இந்திய அணி 0–3 (19–25, 23–25, 18–25) என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
டென்னிஸ்: சுமித் நாகல் ஏமாற்றம்
டென்னிஸ் போட்டிக்கான ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இந்தியாவின் சுமித் நாகல், சீனாவின் வூ இபிங் மோதினர். இதில் ஏமாற்றிய சுமித் நாகல் 4–6, 4–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். கடந்த 1986க்கு பின், ஆசிய விளையாட்டு டென்னிஸ் போட்டியில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை.
துப்பாக்கி சுடுதல்: அனிஷ் 7வது இடம்***
ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல், 25 மீ., ‘ரேபிட் பயர் பிஸ்டல்’ பிரிவு தனிநபர் தகுதிச் சுற்றில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா பங்கேற்றார். இதில் 576.17 புள்ளிகளுடன் 8வது இடம் பிடித்த அனிஷ், பைனலுக்கு தகுதி பெற்றார். அடுத்து நடந்த பைனலில் ஏமாற்றிய அனிஷ் (11 புள்ளி) 7வது இடத்தை கைப்பற்றினார்.
ரக்பி: இந்தியாவுக்கு 2 தோல்வி***
பெண்களுக்கான ரக்பி செவன்ஸ், ‘ஈ’ பிரிவு லீக் போட்டியில் இந்திய அணி 7–33 என, ஹாங்காங்கிடம் தோல்வியடைந்தது. பின், 2வது லீக் போட்டியிலும் ஏமாற்றிய இந்தியா 5–43 என, சீனாவிடம் வீழ்ந்தது.
ஜூடே: நழுவிய வெண்கலம்***
பெண்களுக்கான ஜூடோ 70 கிலோ பிரிவு வெண்கலப்பதக்க போட்டியில் இந்தியாவின் இனுங்கன்பி, மங்கோலியாவின் அனுஜின் உரான்–உல்ஜீ மோதினர். இதில் ஏமாற்றிய இனுங்கன்பி, 0–2 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்தை நழுவவிட்டார். மற்றொரு இந்திய வீராங்கனை யாமினி மவுரியா (57 கிலோ), ‘ரெப்பிசேஜ்’ போட்டியில் தோல்வியடைந்தார்.
