/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஆசிய கபடி: இந்திய பெண்கள் சாம்பியன்
/
ஆசிய கபடி: இந்திய பெண்கள் சாம்பியன்
ADDED : மார் 08, 2025 10:01 PM

டெஹ்ரான்: ஆசிய கபடியில் இந்திய பெண்கள் அணி சாம்பியன் பட்டம் வென்றது. பைனலில் 32-25 என, ஈரானை வென்றது.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில், பெண்களுக்கான ஆசிய கபடி சாம்பியன்ஷிப் 6வது சீசன் நடந்தது. இதன் அரையிறுதியில் இந்திய அணி 56-18 என நேபாளத்தை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் ஈரான் அணி 41-18 என வங்கதேசத்தை வென்றது.
பைனலில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின. அபாரமாக ஆடிய இந்திய அணி 32-25 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்று, 'நடப்பு சாம்பியன்' அந்தஸ்தை தக்கவைத்துக் கொண்டது. தவிர, 5வது முறையாக கோப்பை வென்றது இந்தியா. இதற்கு முன் 2005, 2007, 2008, 2017ல் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. அதிக முறை (5) ஆசிய கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தென் கொரிய அணி ஒரே ஒரு முறை (2016) சாம்பியன் ஆனது. மூன்றாவது முறையாக (2007, 2008, 2025) பைனலில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்றது.
ஈரானுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அரையிறுதியில் தோல்வியடைந்த நேபாளம், வங்கதேச அணிகள் வெண்கலம் வென்றன.