தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஆசிய ரக்பி: இந்தியா ‘வெண்கலம்’

ஆசிய ரக்பி: இந்தியா ‘வெண்கலம்’

ஆசிய ரக்பி: இந்தியா ‘வெண்கலம்’


ADDED : நவ 16, 2026 09:41 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 09:41 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புவனேஸ்வர்: ஆசிய ரக்பி செவன்ஸ் (20 வயது) தொடரில் இந்திய பெண்கள் அணி வெண்கலம் வென்றது.

ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில், ஆசிய ரக்பி செவன்ஸ் எமிரேட்ஸ் (20 வயது) தொடர் நடந்தது. பெண்களுக்கான அரையிறுதியில் இந்தியா, மலேசியா அணிகள் மோதின. இதில் ஏமாற்றிய இந்தியா 12–14 என தோல்வியடைந்தது. அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி, இலங்கையை எதிர்கொண்டது. இதில் இந்தியா 27–0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது.

பைனலில் ஹாங்காங் அணி 43–7 என, மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.

ஆண்கள் 7–8வது இடத்துக்கான போட்டியில் இந்தியா, தாய்லாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 24–7 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 7வது இடத்தை தட்டிச் சென்றது. பைனலில் ஹாங்காங் அணி 34–7 என, மலேசியாவை வென்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us