sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

ஆசிய மல்யுத்தம்: ராதிகா 'வெள்ளி'

/

ஆசிய மல்யுத்தம்: ராதிகா 'வெள்ளி'

ஆசிய மல்யுத்தம்: ராதிகா 'வெள்ளி'

ஆசிய மல்யுத்தம்: ராதிகா 'வெள்ளி'


ADDED : ஏப் 13, 2024 10:59 PM

Google News

ADDED : ஏப் 13, 2024 10:59 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பிஷ்கெக்: ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ராதிகா (68 கிலோ) வெள்ளி வென்றார்.

கிர்கிஸ்தானில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 68 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ராதிகா, கஜகஸ்தானின் அல்பினா மோதினர். இதில் ராதிகா 12-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் ராதிகா 2-0 என கிர்கிஸ்தானின் குல்னுராவை தோற்கடித்தார்.

கடந்த ஆண்டு 23 வயதுக்குட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி வென்ற ராதிகா, பைனலில் ஜப்பானின் நோனோகா ஒசாகியை எதிர்கொண்டார். இதில் ராதிகா 2-15 என தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார்.

பெண்களுக்கான 50 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஷிவானி பவார், ஜப்பானின் ஜிகி பெங்கிடம் தோல்வியடைந்தார். சீன வீராங்கனை பைனலுக்கு முன்னேறியதால், வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு ஷிவானி தகுதி பெற்றார். இதில் ஷிவானி 9-7 என மங்கோலியாவின் டோல்கோர்ஜாவினை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றினார்.

பெண்கள் பிரிவில் நடந்த மற்ற எடைப்பிரிவு போட்டிகளில் இந்தியாவின் தமன்னா (50 கிலோ), புஷ்பா யாதவ் (59 கிலோ), பிரியா (76 கிலோ) பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தனர்.






      Dinamalar
      Follow us