தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி: படகு போட்டி, மல்யுத்தத்தில் அசத்தல்

இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி: படகு போட்டி, மல்யுத்தத்தில் அசத்தல்

இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி: படகு போட்டி, மல்யுத்தத்தில் அசத்தல்


ADDED : அக் 01, 2026 11:06 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 11:06 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அய்ச்சி: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு படகு போட்டி, மல்யுத்தத்தில் வெள்ளி பதக்கம் கிடைத்தன. நேற்று மொத்தம் 6 பதக்கம் கிடைத்தன.

ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. ஆண்கள் இரட்டையர் படகு போட்டியில் இந்தியா சார்பில் மானு பிரான்சிஸ், பிரின்ஸ் குரின்சின்கல் நோபிள் களமிறங்கினர். மொத்தம் 7 'ரேஸ்' (பந்தயம்) நடந்தது. முடிவில் 23 புள்ளியுடன் இரண்டாவது இடம் பெற்ற இந்திய ஜோடி, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது. சீனா (16), ஹாங்காங் (23) ஜோடி, தங்கம், வெண்கலம் வென்றன.

பெண்களுக்கான படகு போட்டியில் இந்தியா சார்பில் ஹர்சித்தா, ஷித்தல் இடம் பெற்ற அணி பங்கேற்றது. 9 'ரேஸ்' முடிவில் இந்திய ஜோடி, 24 புள்ளிகள் பெற்று, மூன்றாவது இடம் பிடிக்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஜப்பான் (11), ஹாங்காங் (15) ஜோடி தங்கம், வெள்ளிப்பதக்கம் பெற்றன.

நிதேஷ் வெள்ளி

ஆண்களுக்கான 'கிரிகோ ரோமன்' மல்யுத்தத்தில் இந்திய வீரர் நிதேஷ் பங்கேற்றார். 97 கிலோ பிரிவு முதல் போட்டியில் துர்க்மெனிஸ்தானின் அமன்பெர்டியை 7-1 என வென்றார். அரையிறுதியில் 9-0 என மங்கோலியாவின் கன்பட்டாரை சாய்த்தார். அடுத்து நடந்த பைனலில் நிதேஷ், ஜப்பானின் யூரி நகஜடோவிடம் 4-2 என்ற கணக்கில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

கணேஷ் 'வெண்கலம்'

வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் போட்டியில் இந்தியாவின் கணேஷ் மணிரத்னம், அரையிறுதியில் தென் கொரியாவின் ஜாங்ஹோவிடம் 144-148 என தோற்றார். அடுத்து வியட்நாமின் காங் டங்கை 149-144 என்ற கணக்கில் வீழ்த்தி, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் சிகிதா, காலிறுதியில் 143-144 என இந்தோனேஷியாவின் நுாரிசாவிடம் தோல்வியடைந்தார்.

ஸ்குவாஷ்: இரண்டு வெண்கலம்

ஸ்குவாஷ் பெண்கள் அணிகளுக்கான அரையிறுதியில் அனாஹத் சிங், ஜோஷ்னா சின்னப்பா, ஷமீனா, தான்வி கன்னா இடம் பெற்ற இந்திய அணி, ஹாங்காங்கை சந்தித்தது. இதில் மூன்று ஒற்றையர் போட்டிகள் நடந்தன. முதல் போட்டியில் இந்தியாவின் அனாஹத் சிங், 2-3 என (11-9, 11-8, 6-11, 11-13, 10-12) சின் சனிடம் போராடி தோல்வியடைந்தார். அடுத்து தான்வி கன்னா 3-1 (4-11, 13-11, 11-9, 13-11) என கா லீயை வெல்ல, ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. கடைசி போட்டியில் ஜோஷ்னா 0-3 (4-11, 7-11, 9-11) என, லொக் ஹோவிடம் தோற்றார். முடிவில் இந்தியா 1-2 என தோல்வியடைந்தது.

* ஆண்களுக்கான அரையிறுதியில் வேலவன் செந்தில்குமார், அபய் சிங், வீர் சோட்ரானி இடம் பெற்ற இந்திய அணி, மலேசியாவை சந்தித்தது. முதல் போட்டியில் அபய் சிங் 0-3 (8-11, 8-11, 8-11) என எய்னிடம் தோற்றார். அடுத்து வீர் சோட்ரானி 3-0 என (11-4, 11-8, 11-5) சஞ்சயை வென்றார். கடைசியில் வேலவன் 1-3 என (12-10, 6-11, 8-11, 9-11) அமீஷன்ராஜிடம் வீழ்ந்தார். முடிவில் இந்திய அணி 1-2 என தோற்றது. இதையடுத்து, இந்திய ஆண்கள், பெண்கள் அணிகளுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தன.

64 ஆண்டு ஏக்கம்

ஆசிய விளையாட்டு மல்யுத்தம் 'கிரிகோ ரோமன்' பிரிவில் கடந்த 1962ல் இந்தியாவின் மால்வா சிங் (52 கிலோ), கன்பத் (+97 கிலோ) என இருவர், தங்கம் வென்றனர். இதன் பின் இதுவரை இப்பிரிவில் யாரும் தங்கம் வெல்லவில்லை. நேற்று நிதேஷும் பைனலில் தோற்க, 62 ஆண்டு ஏக்கம் தொடர்கிறது.

மான்சி ஏமாற்றம்

பெண்களுக்கான மல்யுத்தம் 62 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மான்சி, 6-1 என கஜகஸ்தானின் இரினாவை வீழ்த்தினார். அரையிறுதியில் 6-0 என ஜப்பானின் ஒசாகியிடம் வீழ்ந்தார். அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் 2-5 என மங்கோலியாவின் அல்ட்ஜினிடம் தோல்வியடைந்தார்.

* 60 கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சுமித், ஈரானின் சாஜத்திடம் தோல்வியடைந்தார்.

* 77 கிலோ பிரிவில் இந்தியாவின் அமன், 8-6 என முதல் போட்டியில் மங்கோலியாவின் போர்கிலை வென்றார். அடுத்து காலிறுதியில் 0-9 என கத்தாரின் ஷாஹினிடம் தோற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us