உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 31, 2026 11:11 PM

அ நிறம் | அளவு
புதுடில்லி: ஆசிய விளையாட்டில் பங்கேற்கும் வாள் சண்டை அணியில் தமிழகத்தின் பவானி தேவி இடம் பெற்றார்.
ஜப்பானின் அச்சி-நகோயாவில் ஆசிய விளையாட்டு 20வது ஆசிய விளையாட்டு, வரும் 19 முதல் அக். 4 வரை நடக்க உள்ளது. 43 விளையாட்டில் 71 பிரிவுகளில் போட்டிகள் நடக்க உள்ளன.
இந்தியா சார்பில் 35 விளையாட்டில் 265 வீரர், 227 வீராங்கனைகள் என 492 பேர் களமிறங்குகின்றனர். இதில் பங்கேற்கும் 20 பேர் கொண்ட இந்தியாவின் வாள் சண்டை அணி அறிவிக்கப்பட்டது.
தமிழகத்தின் பவானி தேவி வழி நடத்தவுள்ளார். காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற தனிஷ்கா, கரண்சிங் குர்ஜார், வெண்கலம் கைப்பற்றிய பிராச்சி, தேஜஸ் உள்ளிட்டோரும் இடம் பெற்றனர். இன்று முதல் வரும் செப். 15 வரை, பாட்டியாலா தேசிய முகாமில் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.
