தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குத்துச்சண்டை... இந்தியா தங்க மழை

குத்துச்சண்டை... இந்தியா தங்க மழை

குத்துச்சண்டை... இந்தியா தங்க மழை


ADDED : அக் 02, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 02, 2026 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அய்ச்சி: ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு மூன்று தங்கம் கிடைத்தன.

ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. நேற்று குத்துச்சண்டை போட்டியில் பைனல் நடந்தன. பெண்களுக்கான 75 கிலோ பிரிவில் நேற்று 29 வது பிறந்தநாள் கொண்டாடிய, இந்தியாவின் லவ்லினா, சீனாவின் ஜியி பாவோவை சந்தித்தார். முதல் சுற்றில் 3-2 என முந்திய லவ்லினா, அடுத்த சுற்றில் 4-1 என சிறப்பாக செயல்பட்டார்.

தொடர்ந்து மூன்றாவது கடைசி சுற்றிலும் (4-1) ஆதிக்கம் செலுத்தினார் லவ்லினா. முடிவில் 5-0 என ஒரு மனதாக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட, ஆசிய விளையாட்டில் முதல் தங்கம் வென்றார் லவ்லினா. முன்னதாக கடந்த 2023ல் இவர் வெள்ளி வென்றிருந்தார்.

கடந்த 2014க்குப் (மேரி கோம், தங்கம்) பின் ஆசிய விளையாட்டு குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கம் இது.

பர்வீன் வெற்றி

பெண்களுக்கான 65 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் பர்வீன் ஹூடா 26, சீன தைபேவின் நியன் சின் மோதினர். முதல் சுற்றில் 5-0 என முந்திய பர்வீன், அடுத்த சுற்றில் 0-5 என பின்தங்கினார். கடைசி சுற்றில் சிறப்பாக செயல்பட்ட பர்வீன், முடிவில் 3-2 என 'திரில்' வெற்றி பெற்று, தங்கம் கைப்பற்றினார்.

அன்குஷ் அசத்தல்

ஆண்களுக்கான 80 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் அன்குஷ் பங்கல் 21, தென் கொரியாவின் கிம் மின்சியாங்கை எதிர்கொண்டார். போட்டியின் துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்தினார் அன்குஷ். முதல் சுற்றில் 4-1 என முந்தினார் அன்குஷ். தொடர்ந்து இரண்டாவது சுற்றிலும் 5-0 என முன்னிலை பெற்றார். மூன்றாவது சுற்றில் 1-4 என அன்குஷ் பின்தங்கினார்.

இருப்பினும், அன்குஷ் 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் வசப்படுத்தினார். நேற்று இந்திய வீரர்கள் பங்கேற்ற மூன்று பைனலிலும் சாதித்து, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றனர்.

படகு போட்டி: நேத்ரா 'வெண்கலம்'

பெண்களுக்கான படகு போட்டி பைனலில், தமிழகத்தின் சென்னையை சேர்ந்த நேத்ரா குமணன் 29, பங்கேற்றார். இரண்டு 'ரேசில்' மொத்தம் 14 புள்ளிகள் பெற்ற நேத்ரா, மூன்றாவது இடம் பிடித்து, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். ஆசிய விளையாட்டில் இவர் வென்ற முதல் பதக்கம் இது. ஆண்களுக்கான பைனலில் தமிழகத்தின் விஷ்ணு சரவணன், 21 புள்ளிகள் எடுக்க, நான்காவது இடம் தான் கிடைத்தது.

செபக்தக்ரா: 'முதல்' பதக்கம்

ஆண்கள் அணிகளுக்கான (4 பேர்) செபக்தக்ரா போட்டி அரையிறுதியில் இந்தியா, ஜப்பான் மோதின. இதில் இந்திய அணி 2-0 என (13-15, 13-15) தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. ஆசிய விளையாட்டு ஆண்கள் பிரிவில் (4 பேர்) இந்தியா வென்ற முதல் பதக்கம் இது ஆனது.

நீருவுக்கு 'கொடி' கவுரவம்

ஆசிய விளையாட்டு நிறைவு விழா நாளை நடக்கவுள்ளது. இதில் இந்திய மூவர்ணக்கொடியை, துப்பாக்கி சுடுதல் வீராங்கனை நீரு தண்டா ஏந்தி வர உள்ளார். இவர், இம்முறை 2 தங்கம், ஒரு வெள்ளி என, மூன்று பதக்கம் கைப்பற்றினார். இவருடன், கொடியை ஏந்தி வரவுள்ள இந்திய வீரர் இன்று அறிவிக்கப்பட உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us