தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/குல்வீர் சிங் இரண்டாவது 'வெள்ளி': ஆசிய விளையாட்டில் அபாரம்

குல்வீர் சிங் இரண்டாவது 'வெள்ளி': ஆசிய விளையாட்டில் அபாரம்

குல்வீர் சிங் இரண்டாவது 'வெள்ளி': ஆசிய விளையாட்டில் அபாரம்


ADDED : செப் 28, 2026 11:24 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 11:24 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டு தடகளத்தில் இரண்டாவது வெள்ளிப்பதக்கம் வென்றார் இந்தியாவில் குல்வீர் சிங்.ஜப்பானின் அய்ச்சி - நகோயா நகரில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. தடகளத்தில் ஆண்களுக்கான 1500 மீ., ஓட்டம் நடந்தது. இந்தியா சார்பில் குல்வீர் சிங் 28, பங்கேற்றார். பந்தய துாரத்தை 3 நிமிடம், 36.72 வினாடி நேரத்தில் ஓடிய குல்வீர், இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். ஆசிய விளையாட்டு தடகளத்தில் இவர் வென்ற இரண்டாவது வெள்ளி இது. முன்னதாக 10,000 மீ., ஓட்டத்தில் பதக்கம் வென்றிருந்தார். ஜப்பானின் கஜுடோ (3:36.35), நாகியா (3:37.92) தங்கம், வெண்கலம் வென்றனர். மற்றொரு இந்திய வீரர் யூனஸ் ஷா (3:43.88) 9வது இடம் பிடித்தார். முரளி அபாரம்ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் பைனலில் இந்தியா சார்பில் முரளி ஸ்ரீசங்கர், டேவிட் சாலமன் பட்டுராஜ் பங்கேற்றனர். இரண்டாவது வாய்ப்பில் அதிகபட்சம் 8.07 மீ., தாண்டிய முரளி ஸ்ரீசங்கருக்கு, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. சீனாவின் யுஹாவோ (8.17), உஸ்பெகிஸ்தானின் அன்வரோவ் (8.06) தங்கம், வெண்கலப்பதக்கம் வென்றனர். டேவிட் சாலமன் (7.70) 7வது இடம் பெற்றார். பாருல் 'வெண்கலம்'பெண்களுக்கான 5000 மீ., ஓட்டம் பைனல் நடந்தது. இந்தியாவின் பாருல் சவுத்ரி, 15 நிமிடம், 14.61 வினாடி நேரத்தில் வந்து, மூன்றாவது இடம் பெற, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. மற்றொரு வீராங்கனை சீமா (15:35.06) 6வது இடம் பிடித்தார்.ஈட்டி எறிதலில் 'இரண்டு'ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் இந்தியா சார்பில் யாஷ்விர் சிங், ரோஹித் யாதவ் உட்பட 14 பேர் களமிறங்கினர். கடைசி வாய்ப்பில் அதிகபட்சம் 85.72 மீ., துாரம் எறிந்த யாஷ்விர், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். மூன்றாவது வாய்ப்பில் 84.35 மீ., துாரம் எறிந்த ரோஹித், வெண்கலப் பதக்கம் வென்றார். இலங்கையின் ருமேஷ் பதிராகே, 88.55 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

ஈஷா சிங் கலக்கல்துப்பாக்கி சுடுதலில் பெண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பிஸ்டல்' பிரிவில் தனிநபர் தகுதிச்சுற்று நடந்தது. இந்தியா சார்பில் மனு பாகர், ஈஷா சிங், ராகி சர்னோபட் களமிறங்கினர். ஈஷா சிங் 580 புள்ளியுடன் 8 வது இடம் பெற்று, பைனலுக்கு முன்னேறினார். மனு பாகர் (579) 10, ராகி சர்னோபட் (568) 30வது இடம் பெற்று வெளியேறினர். அடுத்து நடந்த தனிநபர் பிரிவு பைனலில் சிறப்பாக செயல்பட்ட ஈஷா சிங், சீனாவின் ஜியாவோ என இருவரும் மொத்தம் 38 புள்ளிகள் பெற்றனர். வெற்றியாளரை முடிவு செய்ய 'ஷூட் ஆப்' நடந்தது. இதில் ஏமாற்றிய ஈஷா சிங், இரண்டாவது இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றார். ஜியாவோவுக்கு தங்கம் கிடைத்தது.

பதக்கம் வென்றார் பிங்கிமத்திய ஆசியாவை பூர்விகமாக கொண்ட, 3500 ஆண்டு பழைமையான, மல்யுத்த போட்டி குராஷ். இதன் பெண்களுக்கான 78 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிங்கி, 3-0 என தென் கொரியாவின் லிம் கரமை வென்றார். அடுத்து நடந்த அரையிறுதியில் பிங்கி, மற்றொரு தென் கொரிய வீராங்கனை மோ சுமினை சந்தித்தார். இதில் பிங்கி, 0-5 என தோற்க, வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இது, ஆசிய விளையாட்டில் வென்ற இரண்டாவது பதக்கம். இவர், ஏற்கனவே 2018ல் வெள்ளி வென்றிருந்தார்.

ஒரே நாளில் 'எட்டு'ஆசிய விளையாட்டில் நேற்று ஒரே நாளில் இந்தியா, 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 8 பதக்கம் வசப்படுத்தியது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us