தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வெண்கலம் வென்றார் வித்யா: பி.டி.உஷாவின் 42 ஆண்டு சாதனையை தகர்த்தார்

வெண்கலம் வென்றார் வித்யா: பி.டி.உஷாவின் 42 ஆண்டு சாதனையை தகர்த்தார்

வெண்கலம் வென்றார் வித்யா: பி.டி.உஷாவின் 42 ஆண்டு சாதனையை தகர்த்தார்


ADDED : செப் 28, 2026 11:28 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 11:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டு 400 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் வித்யா, வெண்கலம் வென்றார். பி.டி.உஷாவின் 42 ஆண்டு தேசிய சாதனையை தகர்த்தார். ஆசிய விளையாட்டு தடகளத்தில் நேற்று பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டம் நடந்தது. தகுதிச்சுற்றில் அசத்திய இந்தியாவின் வித்யா ராம்ராஜ் (55.73 வினாடி), அனு ராகவன் (55.84) பைனலுக்கு முன்னேறினர். நேற்று நடந்த பைனலில் வித்யா, 54.75 வினாடி நேரத்தில் 'மின்னலாக' ஓடி, மூன்றாவது இடம் பெற்று, வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். எமிரேட்சின் மரியம் (54.31), கஜகஸ்தானின் அடெலினா (54.58) முதல் இரு இடம் பிடித்தனர். அனு ராகவன் (55.88) ஐந்தாவது இடம் பிடித்தார். புதிய சாதனைஇதையடுத்து, 400 மீ., தடை ஓட்டத்தை 55 வினாடிக்குள் ஓடிய முதல் இந்தியர் ஆனார் வித்யா. தவிர, இப்போட்டியில் பி.டி.உஷாவின் 42 ஆண்டுகால சாதனையை தகர்த்து, புதிய தேசிய சாதனை படைத்தார் வித்யா (54.75). முன்னதாக 1984, லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில், 55.42 வினாடி நேரத்தில் ஓடிய, பி.டி.உஷா, 4வது இடம் பிடித்து இருந்தார். * தவிர தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆசிய விளையாட்டில் (2023, 2026) வெண்கலம் கைப்பற்றினார் வித்யா. தமிழரசன் ஏமாற்றம்ஆண்களுக்கான 400 மீ., தடை ஓட்ட பைனலில் இந்தியாவின் சந்தோஷ்குமார் தமிழரசன் பங்கேற்றார். தமிழகத்தை சேர்ந்த இவர், 49.95 வினாடி நேரத்தில் வந்து 7வது இடம் பிடித்தார்.

கோவை வீராங்கனைதமிழகத்தின் கோவையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் வித்யா, 29, நித்யா, 29. இவரது தந்தை 'டிரக்' டிரைவர். துவக்கத்தில் ஹாக்கி விளையாடினர். பின் தடகளத்துக்கு மாறினர். * இம்முறை ஆசிய விளையாட்டில் 4*400 மீ., தொடர் ஓட்டத்தில் வித்யா, நான்காவது பதக்கம் வென்றார். தற்போது, 400 மீ., தடை ஓட்டத்தில் சாதித்துள்ளார்.

உஷா மகிழ்ச்சிஇந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக உள்ள பி.டி.உஷா கூறுகையில்,''எனது சாதனையை அடுத்த தலைமுறை வீராங்கனை முறியடித்ததை பார்ப்பதை விட மகிழ்ச்சி வேறு எதுவும் இருக்காது. இதை வித்யா நிகழ்த்தியது மிகவும் சிறப்பான தருணம்,'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us