தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கமல்ஜீத், சுருச்சி ஜோடி 'தங்கம்': ஆசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதலில்...

கமல்ஜீத், சுருச்சி ஜோடி 'தங்கம்': ஆசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதலில்...

கமல்ஜீத், சுருச்சி ஜோடி 'தங்கம்': ஆசிய விளையாட்டு துப்பாக்கிசுடுதலில்...


ADDED : செப் 25, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 25, 2026 11:18 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நகோயா: ஆசிய விளையாட்டில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம் கிடைத்தது. துப்பாக்கிசுடுதல் கலப்பு அணிகள் பிரிவில் கமல்ஜீத், சுருச்சி ஜோடி தங்கம் கைப்பற்றியது.

ஜப்பானின் அய்ச்சி-நகோயாவில், ஆசிய விளையாட்டு 20வது சீசன் நடக்கிறது. நேற்று துப்பாக்கிசுடுதலில் 10 மீ., ஏர் பிஸ்டல் கலப்பு அணிகளுக்கான போட்டி நடந்தது. இந்தியா சார்பில் கமல்ஜீத் 23, சுருச்சி, 20, பங்கேற்றனர். முதலில் நடந்த தகுதிச்சுற்றில் இந்திய ஜோடி மொத்தம் 587 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறியது.

பைனலில் அசத்திய இந்திய ஜோடி, 484.6 புள்ளியுடன் ஆசிய சாதனை படைத்து, தங்கப்பதக்கம் கைப்பற்றியது. தென் கொரியா (478), ஈரான் (415.8) அணிகள் வெள்ளி, வெண்கலம் வென்றன.

மீண்டும் 'வெள்ளி'

ஆண்கள் அணிகளுக்கான 50 மீ., ரைபிள் 3 பொசிசன்ஸ் பிரிவில் இந்தியா சார்பில் நிராஜ் குமார், ருத்ரான்க்ஸ், ஐஷ்வரி பிரதாப் ஜோடி பங்கேற்றது. மூவரும் இணைந்து மொத்தம் 1762 புள்ளிகள் பெற, இந்திய அணி இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தியது. சீனா (1766), தென் கொரியாவுக்கு (1751) தங்கம், வெண்கலம் கிடைத்தன.

இதுவரை 'பத்து'

ஆசிய விளையாட்டு துப்பாக்கசுடுதலில் இம்முறை இந்தியா ஒரு தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 10 பதக்கம் கைப்பற்றியது.

'வெள்ளி' வீரன் குல்வீர்

ஆண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் இந்தியா சார்பில் குல்வீர் சிங், 28, பங்கேற்றார். 9,600 மீ., முடிவில் மூன்றாவது இடத்தில் இருந்தார் குல்வீர். கடைசி நேரத்தில் சிறப்பாக செயல்பட்ட இவர், 28 நிமிடம், 29.38 வினாடி நேரத்தில் வந்து, இரண்டாவது இடம் பெற்று, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். சமீபத்தில் காமன்வெல்த் விளையாட்டில் 5,000, 10,000 மீ., ஓட்டத்தில் வெள்ளி வென்ற இவர், ஆசிய விளையாட்டில் கைப்பற்றிய இரண்டாவது பதக்கம் இது. முன்னதாக 2023ல் வெண்கலம் வென்றிருந்தார்.

* பஹ்ரைன் வீரர்கள் பிர்ஹானு (28:27.51), ஆல்பர்ட் (28:34.38) தங்கம், வெண்கலம் வென்றனர்.

மன்பிரீத் கவுர் 'வெண்கலம்'

பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டி நடந்தது. இந்தியா சார்பில் மன்பிரீத் கவுர், 36, கிருஷ்ணா, 23, பங்கேற்றனர். நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 17.17 மீ., துாரம் எறிந்த மன்பிரீத் கவுர், மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். பார்பரா (1951ல் வெண்கலம்), கிரணுக்கு (2022ல் வெண்கலம்) அடுத்து ஆசிய விளையாட்டு குண்டு எறிதலில் பதக்கம் வென்ற மூன்றாவது இந்திய வீராங்கனை ஆனார் மன்பிரீத் கவுர்.

மனுஷ், தியா ஜோடி அபாரம்

டேபிள் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் மனுஷ் ஷா, தியா ஜோடி, சுகின் வாங், இங்ஷா ஜோடியை சந்தித்தது. முதல் இரு செட்டை 8-11, 5-11 என இழந்த இந்திய ஜோடி, அடுத்த செட்டையும் 8-11 என நழுவவிட்டது. நான்காவது செட்டிலும் 2-11 என ஏமாற்றியது. முடிவில் இந்திய ஜோடி 0-4 என்ற செட் கணக்கில் தோல்வியடைய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us