ADDED : செப் 25, 2026 11:16 PM

சமர்கண்ட்: உஸ்பெகிஸ்தானில், செஸ் ஒலிம்பியாட் 46வது சீசன் நடக்கிறது. பெண்கள் பிரிவு 9 வது சுற்றில், நடப்பு சாம்பியன் இந்திய அணி, உஸ்பெகிஸ்தானை சந்தித்தது.
இந்திய அணியில் ஹம்பி, வந்திகா, திவ்யா, சவிதா ஸ்ரீ பங்கேற்றனர். உலக கோப்பை சாம்பியன் திவ்யா, குல்ருக்பெகிமை வீழ்த்தினார். வந்திகா, நிலுபர்கோனை சாய்த்தார். ஹம்பி, சவிதா ஸ்ரீ தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர். முடிவில் இந்திய அணி 3.0-1.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
ஓபன் பிரிவு 9 வது சுற்றில் 'நடப்பு சாம்பியன்' இந்திய அணி, ஜெர்மனியை எதிர்கொண்டது. இந்திய அணியில் பிரக்ஞானந்தா, குகேஷ், நிஹால் சரின், அர்ஜுன் களமிறங்கினர். உலக சாம்பியன் குகேஷ், 53 வது நகர்த்தலில் அலெக்சாண்டரை வீழ்த்தினார். பிரக்ஞானந்தா, அர்ஜுன், நிஹால் சரின் தங்களது போட்டிகளை 'டிரா' செய்தனர். முடிவில் இந்தியா 2.5-1.5 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
