/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
ஷாருக் தேசிய சாதனை * ஜூனியர் தடகளம் பைனலுக்கு தகுதி
/
ஷாருக் தேசிய சாதனை * ஜூனியர் தடகளம் பைனலுக்கு தகுதி
ஷாருக் தேசிய சாதனை * ஜூனியர் தடகளம் பைனலுக்கு தகுதி
ஷாருக் தேசிய சாதனை * ஜூனியர் தடகளம் பைனலுக்கு தகுதி
ADDED : ஆக 29, 2024 10:45 PM

லிமா: உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப், 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டியில் தேசிய சாதனை படைத்தார் ஷாருக் கான்.
பெருவில், உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் தொடர் (20 வயதுக்குட்பட்ட) நடக்கிறது. ஆண்களுக்கான 3000 மீ., ஸ்டீபிள் சேஸ் போட்டி நடந்தது.
இதற்கான தகுதிச்சுற்றில் இந்தியாவின் 18 வயது வீரர் ஷாருக்கான், 8 நிமிடம், 45.12 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார். தவிர, இந்திய 20 வயதுக்குட்பட்ட அரங்கில், இது புதிய தேசிய சாதனையாக அமைந்தது.
முன்னதாக கடந்த மே மாதம் புவனேஷ்வரில் நடந்த பெடரேஷன் கோப்பை தேசிய சீனியர் சாம்பியன்ஷிப்பில் ராஜஸ்தான் வீரர் ராஜேஷ், 8:50.12 நிமிடத்தில் ஓடி இருந்தார்.
பைனலில் ஜெய் குமார்
ஆண்களுக்கான 400 மீ., ஓட்டத்தின் அரையிறுதியில் இந்திய வீரர் ஜெய் குமார் பங்கேற்றார். இவர் 46.96 வினாடி நேரத்தில் வந்து மூன்றாவது இடம் பிடித்து, பைனலுக்கு முன்னேறினார். இது இவரது சிறந்த ஓட்டமாகவும் அமைந்தது.
அமனத் ஏமாற்றம்
பெண்களுக்கான வட்டு எறிதல் பைனலில் இந்தியாவின் அமனத் காம்போஜ், 50.06 மீ., துாரம் எறிந்து, 10வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான 400 மீ., தடை ஓட்ட, தகுதிச்சுற்றில் இந்தியாவின் முராத் சிர்மான் (52.85 வினாடி) நான்காவது இடம் பிடிக்க, அரையிறுதி வாய்ப்பு நழுவியது.