/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவுக்கு ஆறு பதக்கம் * ஆசிய யூத் விளையாட்டில் அபாரம்
/
இந்தியாவுக்கு ஆறு பதக்கம் * ஆசிய யூத் விளையாட்டில் அபாரம்
இந்தியாவுக்கு ஆறு பதக்கம் * ஆசிய யூத் விளையாட்டில் அபாரம்
இந்தியாவுக்கு ஆறு பதக்கம் * ஆசிய யூத் விளையாட்டில் அபாரம்
ADDED : அக் 24, 2025 10:52 PM

மனாமா: ஆசிய யூத் விளையாட்டு 100 மீ., தடை ஓட்டத்தில் ஷவுரியா, வட்டு எறிதலில் ஓஷின் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
பஹ்ரைனின் மனாமா நகரில் ஆசிய யூத் விளையாட்டு நடக்கிறது. 40 நாடுகளின் 8000க்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டம் நடந்தது. இந்திய வீரர் ஷவுரியா அவினாஷ், 13.73 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் ஓஷின், அதிகபட்சம் 43.38 மீ., துாரம் எறிந்து, வெள்ளிப்பதக்கம் வசப்படுத்தினார். 400 மீ., ஓட்டத்தில் இந்தியாவின் எட்வினா (55.43 வினாடி) வெள்ளிப்பதக்கம் வென்றார்.
ஆண்களுக்கான 5000 மீ., நடைப் பந்தயத்தில் இந்தியாவின் மண்டல் பலாஷ் (24 நிமிடம், 48.93 வினாடி) வெண்கலம் வென்றார்.
பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் ஜாஸ்மின் கவுர், 14.86 மீ., துாரம் எறிந்து வெண்கலப் பதக்கம் வென்றார். பெய்த்வான் ஜாய் (14.53) 6வது இடம் பிடித்தார்.
ஆண்களுக்கான 'மிக்ஸ்டு மரிட்சியல் ஆர்ட்ஸ்' போட்டியில் இந்தியாவின் வீர் பஹது, தாய்லாந்தின் டெச்சாசோட்டை வீழ்த்தி, வெண்கலம் கைப்பற்றினார். இப்பிரிவில் இந்தியா வென்ற முதல் பதக்கம் இது.
இதுவரை இந்தியா 2 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம் என 13 பதக்கம் வென்று, பட்டியலில் 5 வது இடத்தில் உள்ளது.

