உள்ளடக்கத்திற்கு செல்ல

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/இந்தியாவுக்கு மூன்று பதக்கம் * ஆசிய யூத் தடகள சாம்பியன்ஷிப்பில்
இந்தியாவுக்கு மூன்று பதக்கம் * ஆசிய யூத் தடகள சாம்பியன்ஷிப்பில்
இந்தியாவுக்கு மூன்று பதக்கம் * ஆசிய யூத் தடகள சாம்பியன்ஷிப்பில்
ADDED : ஜூலை 11, 2026 11:10 PM

அ நிறம் | அளவு
ஆர்டோஸ்: ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் நேற்று இந்தியாவுக்கு மூன்று பதக்கம் கிடைத்தன.
சீனாவில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பின் முதல் சீசன் நடக்கிறது. ஆண்களுக்கான 10,000 மீ., பந்தயம் நடந்தது.
இந்தியாவின் ஷிவாஜி பரசுராம், 29 நிமிடம், 33.54 வினாடி நேரத்தில் வந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார். தவிர, இப்போட்டியில் ஷிவாஜியின் சிறந்த செயல்பாடு ஆனது.
பெண்களுக்கான வட்டு எறிதலில் இந்தியாவின் பிரியா, 50.44 மீ., துாரம் எறிய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.
பெண்களுக்கான 400மீ., தடை ஓட்டம் நடந்தது. இந்தியாவின் ஷ்ரவானி சங்கிள், 58.09 வினாடியில் வந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றினார். இதுவரை இந்தியா, 1 தங்கம், 3 வெள்ளி, 8 வெண்கலம் என 12 பதக்கம் வென்றுள்ளது.
