தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பைனலில் நீரஜ் சோப்ரா * 'டைமண்ட் லீக்' தொடரில்

பைனலில் நீரஜ் சோப்ரா * 'டைமண்ட் லீக்' தொடரில்

பைனலில் நீரஜ் சோப்ரா * 'டைமண்ட் லீக்' தொடரில்


ADDED : ஆக 28, 2026 11:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 28, 2026 11:11 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: 'டைமண்ட் லீக்' தடகளத்தின் பைனலில் விளையாட தகுதி பெற்றார் நீரஜ் சோப்ரா 28.

டைமண்ட் லீக் தடகளத்தின் 17வது சீசன் தற்போது நடக்கிறது. 2026ல் உலகின் 14 இடங்களில் போட்டி நடந்தன. இதன் முடிவில் ஒவ்வொரு விளையாட்டிலும் சிறப்பாக செயல்பட்ட 'டாப்-6' நட்சத்திரங்கள், வரும் செப். 4, 5ல் பெல்ஜியத்தின் பிரசல்ஸ் நகரில் நடக்கவுள்ள டைமண்ட் லீக் பைனலில், பங்கேற்க உள்ளனர்.

ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா, ஒட்டுமொத்தமாக 12 புள்ளி பெற்று, பட்டியலில் கடைசி (6வது) இடம் பெற்ற பைனலில் பங்கேற்க தகுதி பெற்றார். இதற்கு முன் 2023, 2024 என இரு முறை வெள்ளி வென்றிருந்தார்.

தவிர, நடப்பு சீசனில் ஈட்டி எறிதலில் அசத்திய இலங்கையின் ருமேஷ் தரங்கா (39), கிரனடாவின் ஆண்டர்சன் (35), டிரினிடாட்டின் கெஸ்ஹார்ன் (23), அமெரிக்காவின் கர்டிஸ் தாம்ப்சன் (20), கென்யாவின் ஜூலியஸ் எகோ (13) என 'டாப்-5' வீரர்கள், டைமண்ட் லீக் பைனலில் பங்கேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us