உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஆக 28, 2026 11:12 PM

அ நிறம் | அளவு
புடாபெஸ்ட்: புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் பைனலுக்கு வேலவன் முன்னேறினார்.
ஹங்கேரியில், புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், வீர் சோட்ரானி மோதினர். இதில் அசத்திய வேலவன் 3-2 (9-11, 11-8, 11-7, 1-11, 12-10) என்ற கணக்கில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். தவிர இவர், 'பி.எஸ்.ஏ., டூர்' தொடரின் பைனலுக்கு 15வது முறையாக முன்னேறினார்.
பைனலில் வேலவன், ஹங்கேரியின் பாலாஸ் பர்காஸ் விளையாடுகின்றனர். பி.எஸ்.ஏ., டூர் அரங்கில் இவர்கள் 3வது முறையாக மோத உள்ளனர். முன்னதாக விளையாடிய 2 போட்டியில், இருவரும் தலா ஒரு போட்டியில் (2019ல் பர்காஸ், 2024ல் வேலவன்) வென்றிருந்தனர்.
