/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
வெண்கலம் வென்றார் தினேஷ் * இந்தியன் ஓபன் தடகளத்தில்...
/
வெண்கலம் வென்றார் தினேஷ் * இந்தியன் ஓபன் தடகளத்தில்...
வெண்கலம் வென்றார் தினேஷ் * இந்தியன் ஓபன் தடகளத்தில்...
வெண்கலம் வென்றார் தினேஷ் * இந்தியன் ஓபன் தடகளத்தில்...
ADDED : ஜூலை 28, 2025 11:17 PM

சங்ரூர்: பஞ்சாப்பில் இந்திய ஓபன் தடகள போட்டி நடந்தது. உலக தடகள சாம்பியன்ஷிப் (செப். 13-21) டோக்கியோவில் நடக்க உள்ள நிலையில், இதில் இந்தியாவின் முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்கவில்லை.
இரண்டாவது நாளான நேற்று ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டி நடந்தது. தமிழக வீரர் தினேஷ், நான்காவது வாய்ப்பில் அதிகபட்சம் 15.66 மீ., துாரம் தாண்டினார். மூன்றாவது இடம் பிடித்து வெண்கலப் பதக்கம் வென்றார். ஏர்போர்ஸ் அணி சார்பில் களமிறங்கிய கார்த்திக் (16.11 மீ.,), ஜே.எஸ்.டபிள்யு., அணியின் செபாஸ்டியன் (15.95 மீ.,) முதல் இரு இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 10,000 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் லதா, (38 நிமிடம், 27.72 வினாடி) ஐந்தாவது இடம் பிடித்து ஏமாற்றினார்.
ஆண்களுக்கான குண்டு எறிதலில் பஞ்சாப் வீரர் தஜிந்தர்பால் டூர், 19.51 மீ., துாரம் எறிந்து தங்கம் வென்றார். தமிழகத்தின் பாலாஜி (16.73), குமரன் (15.82), 11, 19வது இடம் பிடித்தனர்.