/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அன்னு ராணி, அனிமேஷ் அசத்தல் * தேசிய சீனியர் தடகளத்தில்...
/
அன்னு ராணி, அனிமேஷ் அசத்தல் * தேசிய சீனியர் தடகளத்தில்...
அன்னு ராணி, அனிமேஷ் அசத்தல் * தேசிய சீனியர் தடகளத்தில்...
அன்னு ராணி, அனிமேஷ் அசத்தல் * தேசிய சீனியர் தடகளத்தில்...
ADDED : ஆக 23, 2025 10:58 PM

சென்னை: தேசிய சீனியர் தடகள போட்டியில் அன்னு ராணி, அனிமேஷ் தங்கப்பதக்கம் கைப்பற்றினர்.
சென்னையில், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய தடகள சாம்பியன்ஷிப் 64 வது சீசன் நடக்கிறது. இதில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் ஜப்பானின் டோக்கியோவில் நடக்க உள்ள உலக தடகளத்திற்கு (செப். 13-21) தகுதி பெறலாம்.
நேற்று நடந்த பெண்களுக்கான ஈட்டி எறிதலில் உ.பி.,யின் அன்னு ராணி, 61.05 மீ., துாரம் எறிந்து, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தில் பஞ்சாப் வீராங்கனை ராமன்தீப் கவுர் (58.90) தங்கம் வென்றார். தமிழகத்தின் ஒலிம்பா ஸ்டெபி, (59.21 வினாடி) வெள்ளிப்பதக்கம் பெற்றார்.
ஆண்களுக்கான 200 மீ., ஓட்டத்தின் பைனலில் ஒடிசா வீரர் அனிமேஷ் குஜுர் (20.63 வினாடி) தங்கம் கைப்பற்றினார். தமிழகத்தின் ராகுல் குமார் (20.92), அசாமின் அம்லன் போர்கோஹெய்ன் (21.19) வெள்ளி, வெண்கலம் வென்றனர்.
ஆண்கள் உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் ஆதர்ஷ் ராம் (2.21 மீ.,) வெள்ளி வென்றார். பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஷெரின் (6.16 மீ.,) வெண்கலம் வென்றார்.
தமிழகம் முதலிடம்
பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் தங்கம் வென்ற தமிழகத்தின் தனலட்சுமி நேற்று 200 மீ., (23.53 வினாடி) ஓட்டத்திலும் தங்கம் கைப்பற்றினார். நான்கு நாள் முடிவில் தமிழகம் 8 தங்கம், 9 வெள்ளி, 7 வெண்கலம் என மொத்தம் 24 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது.