ADDED : அக் 18, 2025 10:40 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஹனுமகொண்டா: தெலுங்கானாவில் 23 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்தியன் ஓபன் தடகளத்தின் 5வது சீசன் நடந்தது. போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் கார்த்திகா பங்கேற்றார். இவர், 3.85 மீ., உயரம் தாவி, தங்கம் கைப்பற்றினார்.
மற்றொரு தமிழக வீராங்கனை தர்ஷினி, 3.60 மீ., உயரம் தாவி, வெண்கலப் பதக்கம் வென்றார். மற்ற தமிழக வீராங்கனைகள் தீபிகா (3.60), பரமேஸ்வரி (3.50), அருள்மொழி (3.30) 4, 5, 6வது இடம் பிடித்தனர்.
பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் அக்ஸ்சி (13.90 வினாடி) வெள்ளி கைப்பற்றினார். ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழகத்தின் ஷரோன் ஜெஸ்டஸ், 7.82 மீ., தாண்டி, வெள்ளி வென்றார்.
ஆண்களுக்கான 'டெகாத்லான்' போட்டியில் தமிழகத்தின் ஹரிஷ், 6574 புள்ளி எடுத்து, வெண்கலம் பெற்றார்.