/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தமிழக 'தங்கம்' யுவராஜ் * ஜூனியர் தடகளத்தில் தேசிய சாதனை
/
தமிழக 'தங்கம்' யுவராஜ் * ஜூனியர் தடகளத்தில் தேசிய சாதனை
தமிழக 'தங்கம்' யுவராஜ் * ஜூனியர் தடகளத்தில் தேசிய சாதனை
தமிழக 'தங்கம்' யுவராஜ் * ஜூனியர் தடகளத்தில் தேசிய சாதனை
ADDED : ஜூன் 23, 2025 11:48 PM

பிரக்யாராஜ்: தேசிய ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் (20 வயதுக்குட்பட்ட) தொடரின் 23வது சீசன், உ.பி.,யின் பிரக்யாராஜில் நடக்கிறது.
நேற்று நடந்த ஆண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் தமிழக வீரர் யுவராஜ், 13.69 வினாடி நேரத்தில் வந்து தங்கம் கைப்பற்றினார். இது புதிய தேசிய சாதனை ஆனது. முன்னதாக 2021ல் தேஜாஸ் ஷிர்சே (13.74) சாதித்து இருந்தார்.
போல் வால்ட் போட்டியில் தமிழகத்தின் கவின் ராஜா (5.11 மீ.,) தங்கம் கைப்பற்றினார்.
பெண்களுக்கான 100 மீ., தடை ஓட்டத்தில் தமிழகத்தின் ஷினே கிளாடிசியா (14.44) வெள்ளி கைப்பற்றினார். ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் ஜித்தின், 7.83 மீ., துாரம் தாண்டி, வெள்ளிப்பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 400 மீ., ஓட்டத்தில் தமிழகத்தின் தேஷிகா (54.99 வினாடி) வெள்ளி வசப்படுத்தினார்.