/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
தங்கம் வென்றார் தீப்தி * உலக தடகளத்தில்...
/
தங்கம் வென்றார் தீப்தி * உலக தடகளத்தில்...
ADDED : அக் 14, 2025 10:44 PM

பிரிஸ்பேன்: பிரிஸ்பேன் தடகளத்தில் இந்தியாவின் தீப்தி, தங்கம் கைப்பற்றினார்.
ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில், மாற்றுத்திறனாளிகளுக்கான விர்டஸ் உலக தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. இதில் அறிவுசார் குறைபாடு உள்ளவர்களுக்கான 200 மீ., ஓட்டத்தில் இந்திய வீராங்கனை தீப்தி ஜீவன்ஜி பங்கேற்றார். இதில் சிறப்பாக செயல்பட்ட தீப்தி, 24.62 வினாடி நேரத்தில் வந்து, முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
தவிர இது, விர்டஸ் தடகள சாம்பியன்ஷிப்பில் புதிய சாதனை ஆனது. முன்னதாக 25.01 வினாடி நேரத்தில் ஓடியது முதலிடத்தில் இருந்தது. சமீபத்தில் இந்தியாவில் நடந்த பாரா உலக தடகள சாம்பியன்ஷிப்பில் தீப்தி, தங்கம் வென்றிருந்தார். இதையடுத்து நடப்பு சீசனில் தீப்தி வென்ற இரண்டாவது தங்கம் இது ஆனது.