தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ நவ்தீப், சுமித் அன்டில் தங்கம் * உலக பாரா தடகளத்தில்...

நவ்தீப், சுமித் அன்டில் தங்கம் * உலக பாரா தடகளத்தில்...

நவ்தீப், சுமித் அன்டில் தங்கம் * உலக பாரா தடகளத்தில்...


ADDED : பிப் 11, 2026 11:13 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 11, 2026 11:13 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

துபாய்: துபாயில் உலக பாரா தடகள கிராண்ட் ப்ரீ தொடர் நடக்கிறது. 46 நாடுகளில் இருந்து 276 வீரர், 122 வீராங்கனைகள் என மொத்தம் 398 பேர் பங்கேற்கின்றனர்.

ஆண்களுக்கான ஈட்டி எறிதல் எப் 42/44/64 பிரிவில் இந்தியா சார்பில் சுமித் அன்டில் பங்கேற்றார். இவர் அதிகபட்சம் 68.26 மீ., துாரம் எறிந்து தங்கப்பதக்கம் கைப்பற்றினார். பெண்களுக்கான எப் 33/34 பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியாவின் பாக்யஸ்ரீ (14.13 மீ.,) தங்கம் வென்று அசத்தினார். மற்றொரு ஈட்டி எறிதல் வீரர் ரிங்கு ஹூடா (59.46 மீ.னா), எப் 46 பிரிவில் தங்கம் வசப்படுத்தினார்.

பாராலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற நவ்தீப் (41.64 மீ.,) தன் பங்கிற்கு, தங்கம் கைப்பற்றினார்.

எப் 42 பிரிவில் இந்தியாவின் குருபாஸ்கர சேதுபதி, 53.66 மீ., துாரம் ஈட்டி எறிய, வெள்ளிப்பதக்கம் பெற்றார். பெண்களுக்கான எப் 54/55/56 பிரிவு ஈட்டி எறிதலில் இந்தியாவின் பாத்திமா, 15.94 மீ., துாரம் எறிய, வெண்கலப் பதக்கம் கிடைத்தது.

ஆண்களுக்கான 100 மீ., டி 46 பிரிவு ஓட்டத்தில் 10.94 வினாடி நேரத்தில் வந்த இந்தியாவின் திலிப் காவித், தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us