தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தடகளம்: ஜெஸ்வின் ஏமாற்றம்

தடகளம்: ஜெஸ்வின் ஏமாற்றம்

தடகளம்: ஜெஸ்வின் ஏமாற்றம்


ADDED : மார் 02, 2024 10:16 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 02, 2024 10:16 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கிளாஸ்கோ: உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் நீளம் தாண்டுதலில் இந்திய வீரர் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 13வது இடம் பிடித்தார்.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் உலக உள்ளரங்கு தடகள சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. நேற்று ஆண்களுக்கான நீளம் தாண்டுதல் போட்டி நடந்தது. இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின் உட்பட உலகின் சிறந்த 16 வீரர்கள் களமிறங்கினர்.

தனது முதல் வாய்ப்பில் 7.69 மீ., நீளம் தாண்டினார் ஜெஸ்வின். அடுத்த இரு வாய்ப்புகளில் 'பவுல்' செய்தார். முதல் மூன்று வாய்ப்பில் ஜெஸ்வின், 13வது இடம் பிடித்து ஏமாற்றினார். 'டாப்-8' இடம் பிடித்த வீரர்கள் மட்டும் கடைசி மூன்று சுற்று போட்டியில் பங்கேற்றனர்.

கிரீசின் மில்டியாடிஸ் (8.22 மீ.,), இத்தாலியின் மதியா பர்லானி (8.22 மீ.,), ஜமைக்காவின் கேரி மேக்லியாடு (8.21 மீ.,) 'டாப்-3' இடம் பெற்று, தங்கம், வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை தட்டிச் சென்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us