தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/பார்சிலோனா கோல் மழை: லா லிகா கால்பந்தில்

பார்சிலோனா கோல் மழை: லா லிகா கால்பந்தில்

பார்சிலோனா கோல் மழை: லா லிகா கால்பந்தில்


ADDED : செப் 07, 2026 09:46 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 07, 2026 09:46 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வாலென்சியா: ஸ்பெயினில், 'லா லிகா' கோப்பை கால்பந்து 96வது சீசன் நடக்கிறது. வாலென்சியாவில் நடந்த லீக் போட்டியில் பார்சிலோனா அணி, வாலென்சியாவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. பார்சிலோனா அணிக்கு யமால் 2, லோபெஸ், ராபின்ஹா, பெட்ரி தலா ஒரு கோல் அடித்து கைகொடுத்தனர். பார்சிலோனா அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

ஆர்சனல் 'ஹாட்ரிக்' வெற்றி

லண்டன்: இங்கிலாந்தில், பிரிமியர் லீக் கால்பந்து 35வது சீசன் நடக்கிறது. லண்டனில் நடந்த லீக் போட்டியில் செல்சி, ஆர்சனல் அணிகள் மோதின. ஹாவர்ட்ஸ், மார்டின் ஓடேகார்ட் தலா ஒரு கோல் அடிக்க, ஆர்சனல் அணி 2-1 என, 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது. செல்சி அணிக்கு மார்கன் ரோஜர்ஸ் ஆறுதல் தந்தார். ஆர்சனல் அணி, 9 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. கோல் வித்தியாச அடிப்படையில் மான்செஸ்டர் சிட்டி அணி (9 புள்ளி) முதலிடத்தில் தொடர்கிறது.

கூடைப்பந்து: அமெரிக்கா ஆதிக்கம்

பெர்லின்: ஜெர்மனியில், பெண்களுக்கான உலக கோப்பை கூடைப்பந்து 20வது சீசன் நடக்கிறது. 'டி' பிரிவு லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' அமெரிக்க அணி 55-52 என்ற கணக்கில் இத்தாலி அணியை வீழ்த்தியது. ஏற்கனவே சீனாவை வீழ்த்திய அமெரிக்கா, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து காலிறுதிக்கு முன்னேறியது.

எக்ஸ்டிராஸ்

* கொல்கட்டா கால்பந்து லீக் போட்டியில் ஈஸ்ட் பெங்கால், மோகன் பகான் அணிகள் மோதின. இப்போட்டி 1-1 என 'டிரா' ஆனது. புள்ளிப்பட்டியலில் ஈஸ்ட் பெங்கால் (27 புள்ளி), பவானிபூர் (27), மோகன் பகான் (23), 'டாப்-3' வரிசையில் உள்ளன.

* எகிப்தில், வரும் நவ. 2-8ல் டேவிஸ் கோப்பை ஜூனியர் பைனல்ஸ் டென்னிஸ் தொடர் நடக்கவுள்ளது. இதற்கான இந்திய அணிக்கு ரிபவ் சரோஹா, தவிஷ் பஹ்வா, ஹிருத்திக் கடாகம் தேர்வாகினர். பயிற்சியாளராக ராணா பானர்ஜி நியமிக்கப்பட்டுள்ளார்.

* இந்தோனேஷியாவில் நடந்த ஐ.டி.எப்., டென்னிஸ் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் கரன் சிங் 7-5, 7-6 என நியூசிலாந்தின் ஐசக் பெக்ராப்டை வீழ்த்தினார். இது, இவரது 4வது ஐ.டி.எப்., ஒற்றையர் பட்டம்.

* சென்னை ஓபன் கோல்ப் தொடர் இன்று துவங்குகிறது. இதில் இந்தியாவின் ஓம் பிரகாஷ் சவுகான், அக்சய் சர்மா, ரஷித் கான், 'நடப்பு சாம்பியன்' இலங்கையின் நடராஜா தங்கராஜா, மிதுன் பெரேரா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us