/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
பில்லியர்ட்ஸ்: துருவ் சாம்பியன்
/
பில்லியர்ட்ஸ்: துருவ் சாம்பியன்
ADDED : ஜூலை 05, 2024 10:02 PM

ரியாத்: ஆசிய பில்லியர்ஸ் தொடரில் இந்தியாவின் துருவ் சித்வாலா சாம்பியன் ஆனார்.
சவுதி அரேபியாவில் ஆசிய பில்லியர்ஸ் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில், நடப்பு சாம்பியன் இந்தியாவின் பங்கஜ் அத்வானி, சக இந்திய வீரர் சவுரவ் கோத்தாரியை 5-0 என வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் துருவ் சித்வாலா, சக வீரர் திவாஜ் ஹரியாவை 5-4 என வென்றார். அடுத்து நடந்த பைனலில் இந்தியா வீரர்கள் பங்கஜ் அத்வானி, துருவ் சித்வாலா மோதினர்.
முதல் இரு 'பிரேமை' துருவ் 103-0, 100-36 என கைப்பற்றினார். அடுத்த இரு 'பிரேமை' அத்வானி 101-2, 100-11 என வசப்படுத்தினார். பின் நடந்த அடுத்த மூன்று 'பிரேம்களையும்' துருவ் (100-64, 101-23, 100-0) வென்றார்.
முடிவில் துருவ் 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் ஆனார்.