/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: பைனலில் ஜெய்ஸ்மின்
/
குத்துச்சண்டை: பைனலில் ஜெய்ஸ்மின்
ADDED : நவ 19, 2025 10:51 PM

கிரேட்டர் நொய்டா: உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ் தொடரின் பைனலுக்கு இந்தியாவின் ஜெய்ஸ்மின் முன்னேறினார்.
கிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,), உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ் நடக்கிறது. பெண்களுக்கான 57 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜெய்ஸ்மின் லம்போரியா 24, கஜகஸ்தானின் உல்சான் சர்சென்பெக் மோதினர். இதில் ஜெய்ஸ்மின் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் நிகாத் ஜரீன் (51 கிலோ) 5-0 என கனீவா குல்சேவரை வீழ்த்தினார்.
ஆண்களுக்கான 50 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் ஜதுமணி சிங் 5-0 என, ஆஸ்திரேலியாவின் ஓமர் இசாசை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் (55 கிலோ) இந்தியாவின் பவான் பர்த்வால் 5-0 என இங்கிலாந்தின் எல்லிஸ் டிரோபிரிட்ஜை தோற்கடித்தார். மற்ற அரையிறுதியில் இந்தியாவின் சச்சின் சிவாச் (60 கிலோ), ஹிதேஷ் குலியா (70 கிலோ) வெற்றி பெற்றனர்.
அரையிறுதியில் தோல்வியடைந்த இந்தியாவின் ஜக்னோ (85 கிலோ), நீரஜ் போகத் (65 கிலோ), சுமித் (75 கிலோ) வெண்கலம் வென்றனர்.

