/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: நிஷாந்த் தகுதி
/
குத்துச்சண்டை: நிஷாந்த் தகுதி
ADDED : மே 31, 2024 10:45 PM

பாங்காக்: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு இந்தியாவின் நிஷாந்த் தேவ் (71 கிலோ) தகுதி பெற்றார்.
தாய்லாந்தில் பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கான உலக தகுதிச் சுற்று நடக்கிறது. ஆண்களுக்கான 71 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், மால்டோவாவின் வாசில் செபோடாரி மோதினர். உலக சாம்பியன்ஷிப்பில் (2023) வெண்கலம் வென்ற நிஷாந்த் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்ற முதல் இந்திய வீரரானார். ஏற்கனவே இந்திய வீராங்கனைகளான நிகாத் ஜரீன் (50 கிலோ), பிரீத்தி பவார் (54), லவ்லினா (75) தகுதி பெற்றிருந்தனர்.
ஆண்களுக்கான 51 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் அமித் பங்கல் 5-0 என தென் கொரியாவின் கிம் இங்க்யுவை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.
பெண்களுக்கான 60 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அங்குஷிதா போரோ, சுவீடனின் ஆக்னஸ் அலெக்சியுசன் மோதினர். இதில் அங்குஷிதா 2-3 என அதிர்ச்சி தோல்வியடைந்து ஒலிம்பிக் வாய்ப்பை இழந்தார்.
பெண்களுக்கான 66 கிலோ பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் அருந்ததி சவுத்தரி 1-4 என ஸ்லோவேனியாவின் ஜெசிகா டிரைபெலோவாவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.