/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: அரையிறுதியில் பிரீத்தி
/
குத்துச்சண்டை: அரையிறுதியில் பிரீத்தி
ADDED : நவ 16, 2025 11:02 PM

கிரேட்டர் நொய்டா: உலக குத்துச்சண்டை கோப்பை தொடரின் அரையிறுதிக்கு இந்தியாவின் பிரீத்தி பவார் (54 கிலோ), மீனாக் ஷி ஹூடா (48 கிலோ) முன்னேறினர்.
உ.பி., மாநிலம் கிரேட்டர் நொய்டாவில், உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ் தொடர் நடக்கிறது. பெண்களுக்கான 54 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பிரீத்தி பவார், உஸ்பெகிஸ்தானின் நிகினா உக்டமோவா மோதினர். உடல்நிலை சரியில்லாததால், ஒரு ஆண்டுக்கு பின் போட்டிக்கு திரும்பிய பிரீத்தி 5-0 என வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறி பதக்கத்தை உறுதி செய்தார்.
பெண்களுக்கான 48 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் மீனாக் ஷி, கஜகஸ்தானின் போலட் அக்போட்டை வீழ்த்தினார். மற்ற எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் அங்குஷ் பங்கால் (80 கிலோ), நரேந்தர் பெர்வால் (+90 கிலோ) வெற்றி பெற்றனர்.

