/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
காலிறுதியில் அர்ஜுன் * உலக கோப்பை செஸ் தொடரில்
/
காலிறுதியில் அர்ஜுன் * உலக கோப்பை செஸ் தொடரில்
ADDED : நவ 15, 2025 11:11 PM

கோவா: உலக கோப்பை செஸ் தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி முன்னேறினார்.
கோவாவில், உலக கோப்பை செஸ் 11வது சீசன் நடக்கிறது. மொத்தம் 206 பேர் பங்கேற்கின்றனர். உலக சாம்பியன், இந்தியாவின் குகேஷ், கடந்த உலக கோப்பை தொடரின் பைனலுக்கு முன்னேறிய பிரக்ஞானந்தா, விதித் குஜ்ராத்தி உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் தோல்வியடைந்தனர்.
இந்தியாவின் அர்ஜுன் எரிகைசி, ஹரிகிருஷ்ணா என இருவர் மட்டும், இரண்டு போட்டி கொண்ட நான்காவது சுற்றில் பங்கேற்கின்றனர். இவர்கள் மோதிய முதல் போட்டி 'டிரா' ஆனது. நேற்று நான்காவது சுற்றின் இரண்டாவது போட்டி நடந்தது.
அர்ஜுன், உலக கோப்பை தொடரில் இரு முறை சாம்பியன் ஆன, அமெரிக்காவின் லெவான் ஆரோனியனுக்கு எதிராக, நேற்று கருப்பு நிற காய்களுடன் களமிறங்கினார். முதல் 32 நகர்த்தல் வரை போட்டி சமநிலையில் இருந்தது. போட்டி 'டிரா' ஆகலாம் என்ற நிலையில், ஆரோனியன் செய்த தவறை சரியாக பயன்படுத்தினார் அர்ஜுன். அடுத்த 6வது நகர்த்தலில் (38) வெற்றி பெற்றார். முடிவில் அர்ஜுன் 1.5-0.5 என வென்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
ஹரிகிருஷ்ணா-மேக்சிகோவின் மார்டினஸ் மோதிய இரண்டாவது போட்டியும் 'டிரா' ஆக, இருவரும் 1.0-1.0 என சமனில் உள்ளனர். இன்று நடக்கும் 'டை பிரேக்கரில்' சாதித்தால் ஹரி கிருஷ்ணா காலிறுதிக்கு செல்லலாம்.

