/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: வெல்வாரா மைக் டைசன்
/
குத்துச்சண்டை: வெல்வாரா மைக் டைசன்
ADDED : நவ 14, 2024 10:38 PM

இர்விங்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள எர்லிங்டன் நகரில், தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டி இன்று நடக்கிறது. இதில், அமெரிக்காவின் மைக் டைசன், ஜேக் பால் மோதுகின்றனர்.
முன்னாள் உலக 'ஹெவிவெயிட்' சாம்பியனான மைக் டைசன் 58, இதுவரை விளையாடிய 58 போட்டியில், 50ல் வெற்றி கண்டுள்ளார். இதில் 44 போட்டியில் எதிரணி வீரரை 'நாக்-அவுட்' முறையில் வீழ்த்தினார். ஆறு போட்டியில் மட்டும் தோல்வியடைந்தார். எதிரணி வீரரின் காதை கடித்தது, பாலியல் பலாத்காரம், போதை பழக்கம் என பல சர்ச்சையில் சிக்கியதால் போட்டியில் பங்கேற்கவில்லை. சுமார் 20 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தொழில்முறை போட்டிக்கு திரும்பி உள்ளார்.
அமெரிக்காவை சேர்ந்த 'யூடியூப்' பிரபலம் ஜேக் பால் 27, கடந்த 2013 முதல் தொழில்முறையிலான குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்று வருகிறார். இதுவரை விளையாடிய 11 போட்டியில், 10ல் வெற்றி பெற்றார். இதில் 7 முறை 'நாக்-அவுட்' முறையில் வெற்றி கண்டார்.

