/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
அரையிறுதியில் நிஹாத் ஜரீன் * தேசிய குத்துச்சண்டையில் அபாரம்
/
அரையிறுதியில் நிஹாத் ஜரீன் * தேசிய குத்துச்சண்டையில் அபாரம்
அரையிறுதியில் நிஹாத் ஜரீன் * தேசிய குத்துச்சண்டையில் அபாரம்
அரையிறுதியில் நிஹாத் ஜரீன் * தேசிய குத்துச்சண்டையில் அபாரம்
ADDED : ஜன 08, 2026 10:58 PM

கிரேட்டர் நொய்டா: தேசிய குத்துச்சண்டை அரையிறுதிக்கு நிஹாத் ஜரீன், பிரீத்தி, ஹிதேஷ் முன்னேறினர்.
உ.பி.,யில் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் நடக்கிறது. முதன் முறையாக ஆண்கள், பெண்களுக்கான தொடர் ஒரே நேரத்தில் நடத்தப்படுகிறது. 10 பிரிவுகளில் இந்தியா முழுவதும் இருந்து 600 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று காலிறுதி போட்டிகள் நடந்தன. 48-51 கிலோ பிரிவில் உலக சாம்பியன்ஷிப்பில் இரு முறை பதக்கம் வென்ற நிஹாத் ஜரீன், காலிறுதியில் மணிப்பூரின் சானுவை எதிர்கொண்டார். இதில் 5:0 என வென்ற நிஹாத், அரையிறுதிக்கு முன்னேறினார்.
உலக சாம்பியன் மீனாட்ஷி ஹூடா (45-48 கிலோ), பஞ்சாப்பின் காஷிஸ் மேத்தாவை 5:0 என வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தார். 51-54 கிலோ பிரிவு காலிறுதியில் பிரீத்தி, 5:0 என பஞ்சாப்பின் ஹர்மீத் கவுரை வென்றார். சாக்சி 4:1 என பூனமை சாய்த்தார்.
ஆண்கள் 65-70 கிலோ பிரிவு காலிறுதியில், உலக கோப்பையில் தங்கம் வென்ற ஹிதேஷ் குலியா, 5:0 என பஞ்சாப்பின் தேஜஸ்வியை சாய்த்தார். மற்ற போட்டிகளில் பவான் பார்ட்வல் (50-55 கிலோ), ஜடுமானி சிங் (50-55), சச்சின் (55-60) வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினர்.

