/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: லவ்லினாவுக்கு நெருக்கடி * தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பாரா
/
குத்துச்சண்டை: லவ்லினாவுக்கு நெருக்கடி * தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பாரா
குத்துச்சண்டை: லவ்லினாவுக்கு நெருக்கடி * தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பாரா
குத்துச்சண்டை: லவ்லினாவுக்கு நெருக்கடி * தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்பாரா
ADDED : மார் 19, 2025 10:49 PM

புதுடில்லி: ''தேசிய குத்துச்சண்டையில் பங்கேற்க வேண்டாம் என லவ்லினா உட்பட அசாம் வீராங்கனைகளுக்கு நெருக்கடி தரப்பட்டது,'' என பி.எப்.ஐ., தலைவர் அஜய் சிங் தெரிவித்துள்ளார்.
இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பில் (பி.எப்.ஐ.,) நிதி முறைகேடு நடந்ததாக, இந்திய விளையாட்டு ஆணையம் (எஸ்.ஏ.ஐ.,) தெரிவித்தது. இதுகுறித்து விசாரித்த ஓய்வு பெற்ற டில்லி ஐகோர்ட் நீதிபதி சுதிர்குமார் ஜெயின்,'' பி.எப்.ஐ., பொதுச்செயலர் ஹேமந்த குமார் கலிதா, பொருளாளர் திக்விஜய் சிங் என இருவரும், நிதி முறைகேட்டில் ஈடுபட்டனர்,' என்றார்.
இதையடுத்து பி.எப்.ஐ., தலைவர் அஜய் சிங், இருவரையும் உடனடியாக 'சஸ்பெண்ட்' செய்வதாக அறிவித்தார். இதனிடையே இன்று உ.பி.,யின் நொய்டாவில் சீனியர் பெண்களுக்கான தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் 8வது சீசன் துவங்குகிறது. இதில் பங்கேற்க வேண்டாம் என அசாம் செயலராக உள்ள ஹேமந்த குமார், வீராங்கனைகளுக்கு நெருக்கடி கொடுத்ததாக செய்தி வெளியாகின.
இதுகுறித்து பி.எப்.ஐ., தலைவர் அஜய் சிங் கூறியது:
தேசிய சாம்பியன்ஷிப்பில் பங்கேற்க, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற அசாமின் லவ்லினா ஆர்வமாக இருந்தார். ஆனால் இத்தொடரில் பங்கேற்க வேண்டாம் என லவ்லினா உள்ளிட்ட வீராங்கனைகளுக்கு, ஹேமந்த குமார் நெருக்கடி தந்துள்ளார். இதனால் அம்மாநிலத்தில் இருந்து போட்டியில் பங்கேற்க இருந்த பலரும், தங்களது பயண டிக்கெட்டுகளை ரத்து செய்கின்றனர்,'' என்றார்.
இதை மறுத்த ஹேமந்த குமார் கூறுகையில்,'' நான் யாரையும் தடுக்கவில்லை. என்மீது அவதுாறு பரப்புவதற்காக இப்படி சொல்கின்றனர். இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. போட்டி நடக்கும் தேதிகள் குறித்து துவக்கத்தில் இருந்தே மாநில சங்கங்கள் அதிருப்தி தெரிவித்து இருந்தன,'' என்றார்.