/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
உலக குத்துச்சண்டை: லவ்லினா 'ஷாக்' * இரண்டாவது சுற்றில் நிஹாத் ஜரீன்
/
உலக குத்துச்சண்டை: லவ்லினா 'ஷாக்' * இரண்டாவது சுற்றில் நிஹாத் ஜரீன்
உலக குத்துச்சண்டை: லவ்லினா 'ஷாக்' * இரண்டாவது சுற்றில் நிஹாத் ஜரீன்
உலக குத்துச்சண்டை: லவ்லினா 'ஷாக்' * இரண்டாவது சுற்றில் நிஹாத் ஜரீன்
ADDED : செப் 06, 2025 10:49 PM

லிவர்பூல்: உலக குத்துச்சண்டை 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் லவ்லினா, அதிர்ச்சி தோல்வியடைந்தார்
இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில், உலக குத்துசண்டை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் 20 பேர் உட்பட, 65 நாடுகளில் இருந்து, 550 நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
பெண்களுக்கான 75 கிலோ எடைப் பிரிவில், இந்தியாவின் லவ்லினா பங்கேற்றார். டோக்கியோ ஒலிம்பிக்கில் (2021) வெண்கலம் வென்ற இவர், நேரடியாக 'ரவுண்டு-16' போட்டியில் பங்கேற்றார். இதில் துருக்கியின் பஸ்ரா இசில்தரை சந்தித்தார். முதல் சுற்றில் ஏமாற்றிய இவர், 0-5 என்ற கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
நிஹாத் அபாரம்
இரு முறை உலக சாம்பியன் ஆன இந்தியாவின் நிஹாத் ஜரீன், 51 கிலோ பிரிவு 'ரவுண்டு-32' போட்டியில் அமெரிக்காவின் ஜெனிபர் லொஜானோவை எதிர்கொண்டார். இதில் நிஹாத் 5-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை ஜாய்ஸ்மின் (57 கிலோ, 'ரவுண்டு-16'), 5-0 என உக்ரைனின் தாரியாவை வென்றார்.
ஆண்களுக்கான 70 கிலோ பிரிவு 'ரவுண்டு-32' போட்டியில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, 1-4 என, பிரேசிலின் பின் ராபர்ட்டிடம் தோல்வியடைந்தார்.