sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

விளையாட்டு

/

பிற விளையாட்டு

/

குத்துச்சண்டை: இந்தியா கலக்கல்

/

குத்துச்சண்டை: இந்தியா கலக்கல்

குத்துச்சண்டை: இந்தியா கலக்கல்

குத்துச்சண்டை: இந்தியா கலக்கல்


ADDED : நவ 17, 2025 11:16 PM

Google News

ADDED : நவ 17, 2025 11:16 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நொய்டா: உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ், கிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,)நடக்கிறது. ஆண்களுக்கான 70 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ஹிதேஷ் குலியா, உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்ற, ஆசிய சாம்பியன் ஜப்பானின் ஒகஜவாவை எதிர்கொண்டார். இதில் ஹிதேஷ் 4-1 என வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறினார்.

90 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நவீன், கஜகஸ்தானின் டங்காடரை சந்தித்தார். இதில் நவீன் 5-0 என ஒருமனதாக வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.

55 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பவன் பார்த்வல், கஜகஸ்தானின் நுார் சுல்தானை சந்தித்தார். இதில் 5-0 என வெற்றி பெற்ற பவன், அரையிறுதிக்கு தகுதி பெற்றார். 75 கிலோ பிரிவு காலிறுதியில் இந்திய வீரர் சுமித் குமார், 5-0 என தென் கொரியாவின் கிம்மை வீழ்த்தி, அரையிறுதிக்குள் நுழைந்தார்.

இந்தியா சார்பில் நேற்று களமிறங்கிய 5 வீரர்களும் அரையிறுதிக்கு முன்னேறி, குறைந்தபட்சம் ஒரு பதக்கத்தை உறுதி செய்தனர்.






      Dinamalar
      Follow us