/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்திய நட்சத்திரங்கள் கலக்கல் * உலக குத்துச்சண்டை 'பைனல்சில்'
/
இந்திய நட்சத்திரங்கள் கலக்கல் * உலக குத்துச்சண்டை 'பைனல்சில்'
இந்திய நட்சத்திரங்கள் கலக்கல் * உலக குத்துச்சண்டை 'பைனல்சில்'
இந்திய நட்சத்திரங்கள் கலக்கல் * உலக குத்துச்சண்டை 'பைனல்சில்'
ADDED : நவ 18, 2025 10:57 PM

நொய்டா: உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ் தொடரின் பைனலுக்கு ஏழு இந்திய நட்சத்திரங்கள் முன்னேறினர்.
உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ், கிரேட்டர் நொய்டாவில் (உ.பி.,) நடக்கிறது. பெண்களுக்கான 48 கிலோ பிரிவு அரையிறுதியில், உலக சாம்பியன், இந்தியாவின் மீனாக் ஷி, தென் கொரியாவின் பாக் சொரோங்கை சந்தித்தார். இதில் மீனாக் ஷி, 5-0 என வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார்.
முன்னாள் யூத் உலக சாம்பியன், இந்தியாவின் அருந்ததி (70 கிலோ) அரையிறுதியில் ஜெர்மனியின் லியோனியை ஒரு மனதாக வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். 60 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் பர்வீன், உலக குத்துச்சண்டை கோப்பையில் வெள்ளி வென்ற போலந்தின் அனெட்டாவை 3-2 என வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார்.
80 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் அன்குஷ் பங்கல், 5-0 என ஆஸ்திரேலியாவின் மர்லான் செவ்ஹானை வீழ்த்தினார். இந்தியாவின் நுாபுர் (80+), உக்ரைனின் மரியாவை, ஒரு மனதாக வென்றார். இந்தியாவின் அபினாஷ் (60), பிரீத்தி (54) தங்கள் பிரிவில் பைனலுக்கு முன்னேறினர். இதுவரை இந்திய நட்சத்திரங்கள் 7 பேர் (5 வீராங்கனைகள், 2 வீரர்) பைனலுக்கு முன்னேறினர். இந்தியாவின் சவீட்டி (70), அரையிறுதியில் கிரீன்ட்ரீயிடம் (ஆஸி.,) தோற்று, வெண்கலம் வென்றார்.

