/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
இந்தியாவில் உலக குத்துச்சண்டை
/
இந்தியாவில் உலக குத்துச்சண்டை
ADDED : டிச 17, 2024 11:23 PM

புதுடில்லி: இந்தியாவில் உலக குத்துச்சண்டை கோப்பை பைனல் தொடர் நடக்க உள்ளது.
சர்வதேச குத்துச்சண்டை சங்கத்தில் (ஐ.பி.ஏ.,) நிதி முறைகேடு நடந்தன. இதனால் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில், ஐ.பி.ஏ.,வை 'சஸ்பெண்ட்' செய்தது. 2023ல் புதியதாக உலக குத்துச்சண்டை (டபிள்யு.பி.,) அமைப்பு உருவானது. இதன் சார்பில், இந்தியாவில் வரும் 2025ல் உலக குத்துச்சண்டை கோப்பை, பைனல் தொடர் நடத்த அனுமதி தரப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த மூன்று உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்பட்ட வீரர், வீராங்கனைகள், சர்வதேச தரவரிசையில் முன்னிலையில் உள்ள நட்சத்திரங்கள் இணைந்து களமிறங்க உள்ளனர். இதனால், இத்தொடர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
தவிர டபிள்யு.பி., கூட்டம், 2025, நவம்பரில் இந்தியாவில் நடக்க உள்ளது. இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தலைவர் அஜய் சிங் கூறுகையில், ''முக்கியத்துவம் வாய்ந்த குத்துச்சண்டை தொடரை நடத்த, இந்தியாவுக்கு வாய்ப்பு கொடுத்திருப்பது பெருமையாக உள்ளது,'' என்றார்.

