/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
குத்துச்சண்டை: பைனலில் அபினாஷ்
/
குத்துச்சண்டை: பைனலில் அபினாஷ்
ADDED : ஏப் 05, 2025 11:34 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பிரேசிலில் உலக குத்துச்சண்டை கோப்பை தொடர் நடக்கிறது. 65 கிலோ பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் 22 வயது வீரர் அபினாஷ் ஹிதேஷ் ஜாம்வல், இத்தாலியின் கியான்லுகி மலங்காவை சந்தித்தார்
இதில் அபினாஷ் 5:0 என்ற கணக்கில் வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தார். இதில் பிரேசிலின் யூரி ரெய்சை சந்திக்க உள்ளார்.
மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் மணிஷ் ரத்தோர் (55 கிலோ), 0:5 என கஜகஸ்தானின் நுார்சுல்தானிடம் தோல்வியடைந்து வெண்கலம் பெற்றார். இத்தொடரில் இதுவரை இந்தியாவுக்கு 4 வெண்கலப் பதக்கம் கிடைத்தன.

