தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/புடாபெஸ்ட் ஸ்குவாஷ்: வேலவன் 'சாம்பியன்'

புடாபெஸ்ட் ஸ்குவாஷ்: வேலவன் 'சாம்பியன்'

புடாபெஸ்ட் ஸ்குவாஷ்: வேலவன் 'சாம்பியன்'


ADDED : ஆக 29, 2026 09:37 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 09:37 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புடாபெஸ்ட்: புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் சாம்பியன் பட்டம் வென்றார்.

ஹங்கேரியில், புடாபெஸ்ட் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் வேலவன் செந்தில்குமார், ஹங்கேரியின் பாலாஸ் பர்காஸ் மோதினர். இதில் வேலவன் 3-0 (11-4, 11-2, 11-3) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.

இது, பி.எஸ்.ஏ., டூர் அரங்கில் வேலவன் வென்ற 11வது பட்டம். தவிர, ஹங்கேரியின் பர்காசிற்கு எதிராக 2வது வெற்றியை பதிவு செய்தார் வேலவன். இதுவரை மோதிய 3 போட்டியில் வேலவன் 2 (2024, 2026), பர்காஸ் ஒரு (2019) போட்டியில் வெற்றி பெற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us