/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: குகேஷ், விதித் வெற்றி
/
செஸ்: குகேஷ், விதித் வெற்றி
ADDED : ஏப் 06, 2024 11:43 PM

டொரன்டோ: கேண்டிடேட்ஸ் செஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் குகேஷ், விதித் வெற்றி பெற்றனர்.
கனடாவின் டொரன்டோவில் 'கேண்டிடேட்ஸ்' செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் குஜ்ராத்தி உட்பட 8 பேர் பங்கேற்றுள்ளனர்.
இதன் இரண்டாவது சுற்றில் இந்திய வீரர்கள் இந்தியாவின் பிரக்ஞானந்தா, குகேஷ் மோதினர். குகேஷ் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். 15வது நகர்த்தலில் குகேஷ் செய்த தவறு காரணமாக பிரக்ஞானந்தா மீண்டார். இருப்பினும் அடுத்தடுத்த பிரக்ஞானந்தாவின் தவறான நகர்த்தல் காரணமாக போட்டியின் 33 வது நகர்த்தலில் குகேஷ் வெற்றி பெற்றார்.
மற்றொரு போட்டியில் விதித் குஜ்ராத்தி, அமெரிக்காவின் முன்னணி வீரர் ஹிகாரு நகமுராவை எதிர்கொண்டார். இதில் நகமுரா வெல்வார் என நம்பப்பட்டது. மாறாக 29 வது நகர்த்தலில் விதித் வெற்றி பெற்று அசத்தினார். விதித்துக்கு எதிராக தொடர்ந்து 47 போட்டியில் தோற்காமல் வலம் வந்த நகமுரா ஆதிக்கம் முடிவுக்கு வந்தது.
இரு சுற்று முடிவில் விதித் (1.5), குகேஷ் (1.5), அமெரிக்காவின் பேபியானோ காருணா (1.5) 'டாப்-3' இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (0.5) 8வது இடத்தில் உள்ளார்.
பெண்களுக்கான 'கேண்டிடேட்ஸ்' தொடரில் இந்தியாவின் ஹம்பி, ரஷ்யாவின் கேத்தரினா லாக்னோ மோதிய இரண்டாவது சுற்று போட்டி 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் வைஷாலி, டான் ஜோங்கியிடம் (சீனா) தோல்வியடைந்தார்.

