தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/செஸ்: அர்ஜுன் அபாரம்

செஸ்: அர்ஜுன் அபாரம்

செஸ்: அர்ஜுன் அபாரம்


ADDED : ஜூன் 24, 2025 11:48 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2025 11:48 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

தாஷ்கென்ட்: உஸ்பெகிஸ்தானின் தாஷ்கென்ட் நகரில் மாஸ்டர்ஸ் கோப்பை செஸ் தொடர் நடக்கிறது. இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, அரவிந்த் சிதம்பரம் உட்பட உலகின் 10 முன்னணி வீரர்கள் பங்கேற்கின்றனர். இதன் ஐந்தாவது சுற்றில் அர்ஜுன், உஸ்பெகிஸ்தான் வீரர் சம்சுதீனை சந்தித்தார்.

கருப்பு நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், போட்டியின் 55 வது நகர்த்தல் முதல் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தினார். 68 வது நகர்த்தல் முடிவில் அர்ஜுன் வெற்றி பெற்றார்.

மற்றொரு போட்டியில் பிரக்ஞானந்தா, ஈரானின் பர்ஹாவை எதிர்கொண்டார். இதில் பிரக்ஞானந்தா, 68 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார். இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம், உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக்கிடம் 33 வது நகர்த்தலில் வீழ்ந்தார்.

முடிவில் அர்ஜுன் (4.0) முதலிடத்துக்கு முன்னேறினார். பர்ஹாம் (4.0), நாடிர்பெக் (4.0) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். பிரக்ஞானந்தா (3.0) 5, அரவிந்த் சிதம்பரம் (2.0) 9வது இடத்தில் உள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us