/
செய்திகள்
/
விளையாட்டு
/
பிற விளையாட்டு
/
செஸ்: பிரக்ஞானந்தா-குகேஷ் 'டிரா'
/
செஸ்: பிரக்ஞானந்தா-குகேஷ் 'டிரா'
ADDED : மார் 06, 2024 10:33 PM

பிராகு: பிராகு செஸ் தொடரில் பிரக்ஞானந்தா-குகேஷ் மோதிய போட்டி 'டிரா' ஆனது.
செக் குடியரசில் பிராகு சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் பிரக்ஞானந்தா, குகேஷ், விதித் சந்தோஷ் குஜ்ராத்தி பங்கேற்கின்றனர். இதன் ஏழாவது சுற்றில் இந்திய வீரர்கள் பிரக்ஞானந்தா, குகேஷ் மோதினர்.
வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய பிரக்ஞானந்தா, ஆதிக்கம் செலுத்தினார். இருப்பினும் 91வது நகர்த்தலில் போட்டி 'டிரா' ஆனது. விதித் குஜ்ராத்தி, ஈரானின் பர்ஹாமை சந்தித்தார். இதில் ஏமாற்றிய விதித், 29 வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.
இதுவரை முடிந்த ஏழு சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் (5.0) முதலிடத்தில் உள்ளார். ஈரானின் பர்ஹாம் (4.5), செக் குடியரசின் நிகுவேன் (4.0), பிரக்ஞானந்தா (4.0) அடுத்த மூன்று இடத்தில் உள்ளனர். குகேஷ் (3.0) 7வது, விதித் குஜ்ராத்தி (2.0) 10வது இடங்களில் உள்ளனர்.

